விஜயகாந்துடன் ஸ்டாலின் திடீர் சந்திப்பு: படங்கள்

Tamilnadu CM Stalin meets DMDK Vijayakant photos: தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் இன்று சென்னை, சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் வீட்டிற்கு சென்று அவரிடம் நலம் விசாரித்தார்

Tamilnadu CM Stalin meets DMDK Vijayakant photos: தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் இன்று சென்னை, சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் வீட்டிற்கு சென்று அவரிடம் நலம் விசாரித்தார்

author-image
WebDesk
New Update
விஜயகாந்துடன் ஸ்டாலின் திடீர் சந்திப்பு: படங்கள்

தேமுதிக தலைவர் விஜயகாந்த அவர்களைச் சந்திந்து நலம் விசாரித்தார் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின்.

Advertisment

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் இன்று சென்னை, சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் வீட்டிற்கு சென்று அவரிடம் நலம் விசாரித்தார். முதல்வரை பிரேமலதா விஜயகாந்த் மற்றும் எல்.கே.சுதீஷ் வரவேற்றனர். இந்த சந்திப்பின் போது தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மற்றும் எம்.பி, ஆ.ராசா அவர்களும் உடன் இருந்தனர்.

publive-image

அப்போது, கொரோனா பேரிடர் நிவாரண நிதிக்காக ரூ.10 லட்சத்தை தேமுதிக தலைவர் விஜயகாந்த், முதலமைச்சர் ஸ்டாலினிடம் ஒப்படைத்தார்,.

Advertisment
Advertisements

publive-image

இந்த சந்திப்பு தொடர்பாக, தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில், சந்திப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். மேலும் இது மரியாதை நிமித்தமான சந்திப்பு எனவும் விஜயகாந்த் பதிவிட்டுள்ளார்.

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று சில நாட்கள் கழித்து, திமுக இளைஞரணி செயலாளரும் சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின், தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Vijayakanth Stalin

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: