ஃபாக்ஸ்கான் நிறுவனத்தில் பணியாற்றம் 18 ஆயிரத்திற்கு மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் தங்கும் வகையில் காஞ்சிபுரம் மாவட்டம், வல்லம் வடகாலில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஹாஸ்டலை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் சிப்கார்ட் தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டு செயல்பாட்டில் இருந்து வரும் நிலையில், இந்த தொழிற்சாலைகளில் ஏராளமான பெண் தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், தங்கும் விடுதிகள் அமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், காஞ்சிபுரம் பகுதியில் விடுதி ஒன்று கட்டப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் வல்லம் வடகாலில் சிப்கார்ட் நிறுவனத்தின் சார்பில் 706 கோடி மதிப்பில் புதிய விடுத ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. மொத்தம் 13 தொகுதிகள் 10 மாடிகள் கட்டப்பட்டுள்ள இந்த விடுதியில், ஒரு தொகுதியில் 240 அறைகள் உள்ளனர். மொத்தம் 3120 அறைகள் உள்ளன. ஒவ்வொரு அறையிலும் 6 பேர் தங்கும் வகையில் கட்டில்கள் போடப்பட்டுள்ளது. இதில் மொத்தமாக 18720 பேர் தங்கும் வகையில் கட்டப்பட்டுள்ளது.
அதேபோல் ஒவ்வொரு தொகுதியிலும் முதல் தளத்தில் 4000 பேர் அமரும் வகையில், உணவு அருந்தும் இடம், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, 1170 சிசிடிவி கேமராக்கள், சோலார் வாட்டர் ஹீட்டர், கொசுவலைகள், விளையாட்டு அரங்கங்கள். மழைநீர் சேகரிப்ப வசதி, கழிவுநீ சுத்திகரிப்ப வசதி, திட்டகழிவு மேலன்மை வசதி என பல வசதகள் இந்த விடுதியில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த விடுதியை முதல்வர் ஸ்டாலின் இன்ற திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர் டி.ஆர்.பி ராஜா, தாமோ அன்பரசன், ஃபாக்ஸ்கான் நிறுவன தலைவர் யங் லீயு ஆகியோர் பஙகேற்றிருந்தனார். ஃபாகஸ்கான் நிறுவனத்தில் பணியாற்றும் 18720 பெண் தொழிலாளர்கள் பயனடையும் வகையில் இந்த விடுதி கட்டப்பட்டுள்ளது. இந்தியாவில் அதிக தொழில் முதலீடுகளை செய்து வரும் ஃபாக்ஸ்கான் நிறுவனம் தமிழகத்தில் அதிகமான தொழில் செய்து வருகிறது.
காஞ்சிபுரம் ஸ்ரீபெரும்புதூரில் ஃபாக்ஸ்கான் நிறுவனத்திற்கு சொந்தமான 2 தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது. ஆப்பிள் ஐபோன் உதிரிபாகங்கள் பொருத்தும் பணிகள் இங்கு நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“