scorecardresearch

மதுரை, நாகர்கோவிலில் ஸ்டாலின் 2 நாள் நிகழ்ச்சிகள்: முழு விவரம்

முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை காலை 9.30 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் இருந்து இண்டிகோ விமானம் மூலம் மதுரை புறப்டுகிறார்.

மதுரை, நாகர்கோவிலில் ஸ்டாலின் 2 நாள் நிகழ்ச்சிகள்: முழு விவரம்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அடுத்த 3 நாட்களுக்கு மேற்கொள்ள இருக்கும் சுற்றுப்பயணம் மற்றும் நிகழ்ச்சிகள் தொடர்பாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த சில தினங்களாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் அடுத்த 3 நாட்களில் முதல்வர் ஸ்டாலின் மேற்கொள்ளவிருக்கும் பயணம் மற்றும் நிகழ்ச்சிகள் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி நாளை காலை 9.30 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் இருந்து இண்டிகோ விமானம் மூலம் மதுரை புறப்டுகிறார். காலை 11 மணிக்கு மதுரை சென்றடையும் முதல்வர் மதியம் 12.15 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட பிரதிநிதிகளை சந்திக்கிறார்.

அதனைத் தொடர்ந்து மதியம் 1 மணிக்கு மதுரை அரசு விருந்தினர் மாளிகைளில் மதிய உணவு அறுந்திவிட்டு இளைப்பாறுகிறார். அதன்பிறகு மாலை 4 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சட்டம் ஒழுங்கு தொடர்பாபாக காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.

அதனைத் தொடர்ந்து மாலை 6 மணிக்கு கீழடி அருங்காட்சியகத்தை திறந்து வைக்கும் முதல்வர் இரவு மதுரை அரசினர் விருந்தினர் மாளிகையில் தங்குகிறார்.

அதன்பிறகு நாளை மறுநாள் (மார்ச் 6) மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கள ஆய்வில் முதலமைச்சர் திட்ட ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். மாலை 4 மணிக்கு மதுரையில் இருந்து சாலை  மார்க்கமாக நாகர்கோவில் புறப்படுகிறார்.

இரவு 7 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும் முதல்வர், அரசினர் விருந்தினர் மாளிகையில் தங்குகிறார்.

அதன்பிறகு மார்ச் 7-ந் தேதி காலை 9.30 மணிக்கு நகர்கோவில் மாநகராட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். அதனைத் தொடர்ந்து 11 மணிக்கு பிற நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் முதல்வர் மதியம் 2 மணிக்கு தூத்துக்குடி விமான நிலையத்தில் இருந்து சென்னை புறப்படுகிறார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Tamilnadu cm stalin program schedule on next 3 days update