பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 117 ஆவது ஜெயந்தி மற்றும் 62 ஆவது குருபூஜை விழா இன்று நடைபெறுகிறது. இவ்விழாவையோட்டி மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் வெங்கல சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு கீழ் உள்ள முத்துராமலிங்க தேவரின் திருவுருவ படத்திற்கு முதல்வர் பூக்கள் தூவி மரியாதை செலுத்தினார்.
நிகழ்வில் அமைச்சர்கள் மூர்த்தி, பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், ஐ.பெரியசாமி, தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமசந்திரன், அன்பில் மகேஷ், டி.ஆர்.பி.ராஜா, கீதா ஜீவன், பெரியகருப்பன் ,உள்ளிட்டோர்கள் பங்கேற்றனர்.
பின்னர் முதல்வர் ஸ்டாலின் இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்துவதற்காக புறப்பட்டு சென்றார்.
முத்துராமலிங்க தேவர் குருபூஜை விழாக்களை ஒட்டி மதுரை மாவட்டத்தில் 5,000க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியினை மேற்கொண்டு வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“