தினந்தோறும் ஆசிரியர் விடும் அறிக்கையை வைத்துதான், நாங்கள் என்ன முடிவு எடுக்க வேண்டும் என்று தீர்மானிக்கப்படுகிறது என முதல்வர் மு.க.ஸ்டலின் கூறியுள்ளார்.
திராவிட கழகத்தலைவர் கி.வீரமணியின் 90-வது பிறந்த நாள் விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில், காங்கிரஸ் மதிமுக விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட், என பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்ற நிலையில், முதல்வர் ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
இந்நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு சமூக நீதிக்கான கி.வீரமணி விருது வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மேடையில் பேசிய முதல்வர் ஸ்டாலின் முதல்கட்டமாக சமூகநீதிக்கான கி.வீரமணி விருதுக்கு தன்தை தேர்வு செய்ததாற்காக நன்றி தெரிவித்தார்.
தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் தன் உயிரையுமு் காத்து எனது உயிரையும் காத்த கருப்பு சட்டைக்காரர்தான் ஆசிரியவர் வீரமணி. அவரின் 90-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. மிசா சட்டத்தின்போது என்மீது விழுந்த அடிகளை தாங்கியவர் சிட்டி பாபு மட்டுமல்ல ஆசிரியரும்தான். அவரின் 100-வது பிறந்த நாளையும் கொண்டாடுவோம்.
மிசா சட்டத்தின்போது எனக்கு மன தைரியத்தை கொடுத்த ஆசிரியர், திமுக மீது அரசியல் எதிரிகள் வைக்கும் விமர்சனங்களை தடுக்கும் கேடயமாக உள்ளார். கருணாநிதி மறைக்கு பின் எனக்கு தெம்மையும் தைரியத்தையும் கொடுத்தவர் ஆசிரியர். 1945 மட்டுமல்ல 2022-ம் ஆண்டிலும், போர்களம் நோக்கி செல்ல தயாராக இருப்பவர். ஆன்லைன் ரம்மி சட்டத்திற்கு ஆளுனர் ஒப்புதல் அளிக்காததற்கு முதல் ஆளாக எதிர்ப்பு குரல் கொடுத்தவர்.
தினந்தோறும் ஆசிரியர் வீரமணி வெளியிடும் அறிக்கையை வைத்து தான் நாங்கள் என்ன முடிவு எடுக்க வேண்டும் என்பது தீர்மானிக்கப்படுகிறது. அரசு குறித்து அவதூறு பிரச்சாரங்களை முன்வைக்கும்போது முதல் ஆளாக பதில் அளிப்பவரும் ஆசிரியர் வீரமணிதான். குடும்பம் குடும்பமாக இயக்கப்படுத்தியதால் இது ஒரு குடும்ப இயக்கம் என்று சொல்லலாம். கொள்கை ஒருபக்கம் என்றாலும் தியாகம் அன்பு தான் திராவிடத்தின் அடிக்கட்டுமானம். இதுவரை யாராலும் திராவிட இயக்கத்தை தொட்டு பார்க்க முடியவில்லை. இனியும் முடியாது. திராவிட இயக்கம் கட்சி அல்ல கொள்கை முடிவு வளர்ந்துகொண்டே இருக்கும் என்று கூறியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil