அண்ணா பல்கலைகழக மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டு அவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வரும் நிலையில், இது குறித்து தமிழக சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் பயின்று வரும் மாணவி ஒருவர், தனது நண்பருடன் கல்லூரி வளாகத்தில் மாணவி பேசிக்கொண்டு இருந்தபோது, அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர் மாணவரை தாக்கி, மாணவியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளனர். இதில் பாதிக்கப்பட்ட மாணவி, கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில், கோட்டூர்புரம் போலீசார் விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையில், கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளைக் ஆய்வு செய்த நிலையில், மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த விவகாரம் தொடர்பாக ஞானசேகரன் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவர் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளதாகவும் காவல் துறையினர் அறிக்கை வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து, ஞானசேகரன் வீட்டில், காவல்துறையினர் நடத்திய சோதனையில் பல ஆதராங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், தமிழ்நாடு சட்டசபையில், பல்கலைகழக மாணவி பாலியல் வழக்கு தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அப்போது பேசிய முதல்வர் ஸ்டாலின், நீங்கள் அனைவரும் பல்கலைகழக பெயரை சொல்லி பேசியிருக்கிறீர்கள். ஆனால், நான் பல்கலைகழக பெயரை சொல்லி அதற்கு களங்கத்தை ஏற்படுத்த விரும்பவில்லை. ஏனென்றால் எங்களை எல்லாம் ஆளாக்கியவர் அவர். அவர் பெயரை தவிர்த்துவிட்டு, சென்னையில் ஒரு மாணவி மீது நடத்தப்பட்டிருக்கும் பாலியல் வன்கொடுமை மாபெருஐம் கொடூரம்.
இந்த வன்கொடுமை சம்பவத்தை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. இது குறித்து அவையில் வேல்முருகன், சிந்தனை செல்வன், ஜி.கே.மணி, ஜெகன்மூர்த்தி. நாகை மாலி, உதயகுமார் ஆகியோர் கருத்துக்களை பேசியிருக்கிறார்கள். முதல் தகவல் அறிக்கை வெளியானதை வைத்துக்கொண்டு, யார் அந்த சார்? என கேட்கிறீர்கள். உயர் நீதிமன்ற உத்தரவுபடி நியமிக்கப்பட்ட சிறப்பு புலனாய்வு குழுதான் இந்த விழக்கை விசாரித்து வருகிறது. கைது செய்யப்பட்ட குற்றவாளி குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த விசாரணையில் குற்றம் செய்தது யார் என்று தெரியவந்தால், அவர்கள் மீது காவல்துறை தயவு தாட்சண்யம் இல்லாமல் நடவடிக்கை எடுக்கும் என்று 100 சதவிகித உறுதியுடன் தெரிவித்துகொள்கிறேன். யார் அந்த சார் என்று எதிர்க்கட்சிகள் கேட்கிறீர்கள். உண்மையில் உங்களிடம் இதற்கு ஆதாரம் இருந்தால் அதை சிறப்பு புலனாய்வு குழுவிடம் கொடுங்கள். யார் தடுக்க போகிறார்கள். அதைவிட்டுவிட்டு, ஒரு மாணவி சம்பந்தப்பட்ட சென்சிட்டிவான வழக்கில் வீண் விளம்பரத்துக்காக, குறுகிய அரசியல் லாபத்துக்காக மலிவான செயலில் ஈடுபட வேண்டாம்.
பெண்களுக்கு எதிரான குற்றத்துக்கு 86 சதவிகித வழக்குகளில் 60 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும், சென்னை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டவர் திமுகவைச் சேர்ந்தவர் அல்ல. திமுக அனுதாபி, யாரையும் காப்பாற்ற அரசு முயலவில்லை என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“