Advertisment

தமிழ் மண்ணில் இருப்பது போலவே உணர்கிறேன்; சிகாகோ நிகழ்ச்சியில் ஸ்டாலின் பேச்சு

அமெரிக்காவுக்கு லேட்டாக வந்திருக்கிறேன், ஆனால் வரவேற்பு லேட்டஸ்ட் ஆக உள்ளது; சிகாகோவில் நடைபெற்ற வட அமெரிக்க தமிழ்ச்சங்க கலைவிழாவில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

author-image
WebDesk
New Update
Stalin Chicago

தமிழ் மண்ணில் இருக்கும் மாதிரியான உணர்வை இந்த நிகழ்ச்சி எனக்கு ஏற்படுத்தியுள்ளது என சிகாகோவில் நடைபெற்ற வட அமெரிக்க தமிழ்ச்சங்க கலைவிழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார்.

Advertisment

உலக நாடுகளில் உள்ள தொழில் நிறுவனங்களை தமிழகத்தில் தொழில் முதலீடுகளை செய்ய வைப்பதற்கான முயற்சியின் ஒரு பகுதியாக, தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த 27 ஆம் தேதி சென்னையில் இருந்து அமெரிக்காவுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டார். அங்கு பல்வேறு நிறுவனங்களுடன் தொழில் முதலீட்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி வருகின்றன.

இந்தநிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் சிகாகோவில் நடைபெற்ற வட அமெரிக்க தமிழ்ச்சங்க கலைவிழாவில் பங்கேற்று உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் பட்டு வேட்டி சட்டை அணிந்து முதல்வர் ஸ்டாலின் கலந்துக் கொண்டார்.

நிகழ்ச்சியில் ஸ்டாலின் உரையாற்றியதாவது, “திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாடு முன்னேற்றம் அடைந்திருப்பது உங்கள் அனைவருக்கும் நன்றாக தெரியும். தமிழ் மண்ணில் இருக்கும் மாதிரியான உணர்வை இந்த நிகழ்ச்சி எனக்கு ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவுக்கு லேட்டாக வந்திருக்கிறேன், ஆனால் வரவேற்பு லேட்டஸ்ட் ஆக உள்ளது. தமிழ்நாட்டுக்குக் குழந்தைகளோடு வாருங்கள். வானுயர்ந்து நிற்கும் வள்ளுவரை காட்டுங்கள். நம்முடைய வரலாற்றின் அடையாளமாக விளங்கும் கீழடி அருங்காட்சியகத்தை காட்டுங்கள். சிவகளை, கொற்கை, பொருநை போன்ற இடங்களுக்கு அழைத்துசெல்லுங்கள். 

நான் தமிழ்நாட்டுக்கு திரும்பிய பிறகும், உங்களின் இந்த ஆரவாரம், மகிழ்ச்சியான முகங்கள் என் ஞாபகத்துக்கு வரும். உங்களுக்குள் எந்தப் பிளவுகளும் ஏற்பட அனுமதிக்காதீர்கள். ஒரு தாய் மக்களாக வாழுங்கள், அறிவையும், உழைப்பையும் மட்டும் நம்பி, வாழ்க்கைப் பயணத்தை தொடருங்கள். கிணற்றுத் தவளைகள் அல்ல தமிழர்கள். வானத்தையே வசப்படுத்தும் வானம்பாடிகள் என்பதற்கான பொருள் நீங்கள். திறமையால் தமிழன் தலைநிமிர்ந்து வாழ்வான் என்பதன் அடையாளம் நீங்கள். உங்களில் சிலர் மட்டும்தான் இந்த நாட்டுக்கு விரும்பி வந்திருப்பீர்கள் என முதலமைச்சர் ஸ்டாலின் பேசினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Mk Stalin America
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment