Advertisment

சட்டமன்றத்தில் மீண்டும் நீட் மசோதா; விவாதிக்க அனைத்துக் கட்சி கூட்டம்: ஸ்டாலின் அறிவிப்பு

Tamilnadu Update : தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் சட்டமன்ற அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டத்தைக் கூட்ட இந்த அரசு முடிவு செய்துள்ளது

author-image
WebDesk
New Update
சட்டமன்றத்தில் மீண்டும் நீட் மசோதா; விவாதிக்க அனைத்துக் கட்சி கூட்டம்: ஸ்டாலின் அறிவிப்பு

TN Neet Execution Bill Rejected Update : தமிழகத்தில் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டிய சட்டமன்றத்தில தாக்கல் செய்யப்பட்ட நீட் விலக்கு மசோதாவை நிராகரித்த தமிழக ஆளுனர் ஆர்.என்.ரவி அதனை மீண்டும் தமிழக அரசுக்கே திருப்பி அனுப்பியள்ள நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

இந்தியாவில் மருத்துவம் பயில விரும்பும் மாணவர்கள் கட்டாயம் நீட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது அவசியம். ஆனால் இந்த தேர்வில் தோல்வி பயம்,தோல்வி மற்றும் இதர பிற காரணங்களுக்காக மாணவர்கள தற்கொலை செய்துகொள்ளும் நிகழ்வு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. நீட் தேர்வு தொடங்கியதில் இருந்து தமிழகத்தில் பல மாணவர்கள் தற்கொலை அரங்கேறியுள்ளது.

இந்த நிகழ்வுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் தமிழக சட்டசபையில், கடந்த செப்ம்பர் மாதம் 12-ந் தேதி நீட் விலக்கு மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுனர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அதன்பிறகு இந்த மசோதா குறித்து ஆளுனர் தரப்பில் எவ்வித அறிவிப்பும் வெளியாகாத நிலையில், இன்று திடீரென தமிழக அரசின் நீட் விலக்கு மசோதா நிராகரிக்கப்படுவதாக ஆளுனர் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆளுனர் மாளிகையின் இந்த திடீர் அறிவிப்பு தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அரசியல் தலைவர் பலரும் ஆளுனர் ஆர்.என்.ரவியின் நடவடிக்கைக்கு தங்களது கண்டனத்தை பதிவு செய்து வரும் நிலையில், தமிழக சட்டசபையில் மீண்டும் நீட் விலக்கு மசோதா கொண்டுவரப்படும் என்றும், இது தொடர்பாக வரும் 5-ந் தேதி அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளர்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

நீட் விலக்கு தொடர்பான சட்டமுன்வடிவினை மாண்புமிகு ஆளுநர் அவர்கள் திருப்பி அனுப்பியுள்ள நிலையில், அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதித்து முடிவு செய்திட சட்டமன்ற அனைத்துக் கட்சித் தலைவர்களுடனான ஆலோசனைக் கூட்டம் 5-2-2022 அன்று காலை 11-00 மணி அளவில் நடைபெறும். தமிழ்நாட்டில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிப்பதற்கான சட்டமுன்வடிவு 13-9-2021 அன்று சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, மாண்புமிகு குடியரசுத் தலைவர் அவர்களின் ஒப்புதலைப் பெற்றிட, ஒன்றிய அரசிற்கு அனுப்பி வைப்பதற்காக மாண்புமிகு ஆளுநர் அவர்களுக்கு அனுப்பப்பட்டது.

இந்தச் சட்டமுன்வடிவை மாண்புமிகு ஆளுநர் அவர்கள், ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைக்காத நிலையில், இதனை உடனடியாக அனுப்ப வேண்டும் என்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் மாண்புமிகு ஆளுநர் அவர்களை நேரில் சந்தித்து வலியுறுத்தினார். இருப்பினும், இந்தச் சட்டமுன்வடிவு ஒன்றிய அரசுக்கு அனுப்பப்படாத நிலையில், அந்தச் சட்டமுன்வடிவை தமிழ்நாடு சட்டமன்றம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என மாண்புமிகு ஆளுநர் அவர்கள் 1-2-2022 அன்று மாண்புமிகு சட்டமன்றப் பேரவைத் தலைவர் அவர்களுக்குத் திருப்பி அனுப்பி வைத்துள்ளதாகக் குறிப்பிட்டு, ஆளுநர் அலுவலகத்தில் இருந்து ஒரு செய்திக்குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

எனவே, மாண்புமிகு ஆளுநர் அவர்கள் தெரிவித்துள்ள கருத்துகளை ஆராய்ந்து, நீட் தேர்வு பற்றிய உண்மை நிலையைத் தெளிவாக விளக்குவதோடு, இந்தச் சட்டமுன்வடிவை மீண்டும் சட்டமன்றத்தில் நிறைவேற்றுவதற்கான அனைத்து முயற்சிகளையும் இந்த அரசு முன்னெடுக்கும். இதுகுறித்து எடுக்கப்பட வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதித்து முடிவு செய்திட, 5-2-2022 அன்று காலை 11-00 மணி அளவில், தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் சட்டமன்ற அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டத்தைக் கூட்ட இந்த அரசு முடிவு செய்துள்ளது

என்று குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu Neet
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment