சட்டவிரோத பணப்பரிமாற்றம் வழக்கில் கைது செய்யப்பட்டள்ள ஜார்க்கண்ட மாநில முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஆதரவாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
சட்டவிரோத பணப்பரிமாற்றம், நில மோசடி வழக்கு தொடர்பாக ஜார்க்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பியிருந்த நிலையில், கடந்த வாரம் அவரது வீட்டில் வைத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தினார். இதனைத் தொடர்ந்து, அவரிடம் ஜனவரி 28 மற்றும் 29-ந் தேதிகளில் மீண்டும் விசாரணை நடத்தப்படும் என்று கூறிய நிலையில், ஹேமந்த் சோரன் தலைமறைவாகிவிட்டதாக தகவல் வெளியானது.
இதனிடையே டெல்லியில் உள்ள அவரது வீட்டில் சோதனை மேற்கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள், 36 லட்சம் பணம், சொகுசு கார் மற்றும் ஆவணங்கள் ஆகியவற்றை கைப்பற்றியிருந்தனர். இதனைத் தொடர்ந்து ரஞ்சியில் உள்ள ஹேமந்த் சோரன் வீ்ட்டில் போலீசார் குவிக்கப்பட்ட நிலையில், தொண்டர்கள் அவருக்கு ஆதரவு தெரிவித்து கோஷங்கள் எழுப்பினர்.
இதன் காரணமாக ஹேமந்த் சோரன் வீடு, ஆளுனர் மாளிகை, மற்றும் அமலாக்கத்துறை அலுவலகம் ஆகிய இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தற்போது ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் மாநிலம் முழுவதும் ஜேஎம்எம் கட்சி தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
Outrageous and shameful!
— M.K.Stalin (@mkstalin) February 1, 2024
The arrest of Hon'ble Jharkhand Chief Minister Thiru @HemantSorenJMM is a blatant display of political vendetta by Union BJP Govt. Using investigative agencies to harass a tribal leader is a new low. This act reeks of desperation and abuse of power.… pic.twitter.com/X6Mvk0WSXX
இதனிடையே ஹேமந்த் சோரனின் கைது நடவடிக்கை, பாஜகவின் பழிவாங்கும் அரசியல் என்று தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், மூர்க்கத்தனமான மற்றும் அவமானகரமான செயல்! ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன், மீதான செயல், மத்திய பாஜக அரசின் அரசியல் பழிவாங்கும் அப்பட்டமான காட்சி. புலனாய்வு அமைப்புகளைப் பயன்படுத்தி ஒரு பழங்குடித் தலைவரை துன்புறுத்துவது துரதிஷ்டவசமானது. இந்த செயல் விரக்தியையும், அதிகார துஷ்பிரயோகத்தையும் தூண்டும் வகையில் உள்ளது.
பாஜகவின் கேவலமான தந்திரங்கள் எதிர்க்கட்சிகளின் குரல்களை அடக்கிவிடாது. பாஜகவின் பழிவாங்கும் அரசியல் இருந்தாலும் ஹேமந்த் சோரன் தலைவணங்க மறுத்து வலுவாக நிற்கிறார். பல இன்னல்களை எதிர்கொண்டாலும் அவரது மன உறுதி பாராட்டுக்குரியது. பா.ஜ.க.வின் மிரட்டல் தந்திரங்களை எதிர்த்துப் போராடுவதற்கான அவரது உறுதிப்பாடு ஒரு உத்வேகம் அளிக்கிறது என்று பதிவிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.