/tamil-ie/media/media_files/uploads/2022/12/Express-Image-5.jpg)
2022ஆம் ஆண்டு ஃபிபா உலகக்கோப்பை தொடர் நவம்பர் மாதம் 20ஆம் தேதியில் இருந்து விறுவிறுப்பாக நடைபெற்றது.
நேற்று நடந்த இறுதியாட்டத்தில், அர்ஜென்டினா 4-2 என்ற கோல் வித்தியாசத்தில் பிரான்ஸ் அணியை வீழ்த்தியாது. இது அர்ஜென்டினா அணியின் மூன்றாவது சாம்பியன் பட்டம் என்பதால் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் கோலாகலமாக இவ்வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.
பிரான்ஸ்ஸுக்கு எதிராக நடந்த இறுதிப் போட்டியில், லியோனல் மெஸ்ஸி அடித்த கோலைக் கண்டு பலர் அவரை பாராட்டி வருகின்றனர்.
இந்தியாவில் இருந்து பல ரசிகர்கள் தங்களது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்து கொண்டாடி வருகின்றனர். இதை தொடர்ந்து, தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின், விளையாட்டு வீரர்களுக்கு தனது பாராட்டை சமூக வலைத்தளம் வாயிலாக பகிர்ந்துள்ளார்.
What an absolute humdinger of a match! The never-say-die attitude of #France & #Mbappé's Hat-trick made it one of the best world cup finals ever.
— M.K.Stalin (@mkstalin) December 18, 2022
Congratulations to #Argentina & #GOAT#Messi𓃵 on winning the #FIFAWorldCup. Special word of appreciation must go to Martinez. pic.twitter.com/7LiEdY1k4P
டுவீட்டில் பதிவிட்டதாவது, "கால்பந்து உலகக்கோப்பையை வென்ற அர்ஜெண்டினாவுக்கும், GOAT மெஸ்ஸிக்கும் வாழ்த்துகள்; கோல் கீப்பர் மார்டினெஸுக்கு சிறப்பு பாராட்டு சொல்ல வேண்டும்.
எம்பாப்பேவின் ஹாட்ரிக் கோலும், பிரான்ஸின் ஆட்டமும் உலகக்கோப்பையில் சிறந்த இறுதிப் போட்டிகளில் ஒன்றாக அமைந்தது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது டுவீட்டில் தெரிவித்துள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.