கோவை
கோவை கரும்புக்கடை போலீசார் சுண்ணாம்பு காலவாய் பகுதியில் ரோந்து பணி மேற்கொண்ட போது சந்தேகத்திற்கிடமாக சுற்றித்திரிந்த ஐந்து இளைஞர்களை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்கள் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட மெத்தபட்டோமின், மருந்து குப்பிகள் உள்ளிட்டவற்றை விற்பனைக்காக வைத்திருந்தது தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து ஐந்து (பிரவின் செட்டி, சாகுல் அமீது, முருகன், ரியாஸ்கான், அக்பர் அலி) பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 3 கிராம் மெத்தபடோமெயின் மற்றும் 116 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
இது தொடர்பாக கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில்,இந்த வழக்கில் கர்ப்பிணி பெண்கள் பயன்படுத்தும் வலி நிவாரணி மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளது. இதனை போதைக்காக பயன்படுத்தி வந்துள்ளனர்.. இந்த மாத்திரைகளை கர்நாடகாவில் இருந்து வாங்கி உள்ளனர். அங்கு ஊப்பிலி என்ற இடத்தில் மருந்து கடை வைத்து நடத்தி வரும் பிரவீன் செட்டி என்பவர் கோவையில் அவர் இந்த மாத்திரைகளை அதிகம் விற்பனை செய்துள்ளார்.
14 ரூபாய் மதிப்புள்ள இந்த மாத்திரைகளை அதிக விலைக்கு விற்பனை செய்துள்ளனர். கோவையில் மட்டும் 1 லட்சத்திற்கும் மேல் இந்த மாத்திரைகளை விற்பனை செய்துள்ளனர். தற்போது இவர்கள் பிடிபட்டதன் மூலம் சப்ளை பாயிண்ட் முழுமையாக நிற்கும் என்ற நம்பிக்கை உள்ளது. கோவை மாநகரில் பள்ளி கல்லூரி மாணவர்கள் மத்தியில் தொடர்ந்து இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. பள்ளி கல்லூரிகள் திறப்பதற்கு முன்பாகவே இவற்றையும் குட்கா பொருட்கள் விற்பனையை தடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கோவையில் கஞ்சா உள்ளிட்டவற்றின் விற்பனை குறைந்துள்ளதால் இது போன்ற மாத்திரைகளை நோக்கி செல்கின்றனர். கோவையில் இது போன்ற மாத்திரைகள் தடுக்கப்பட்டதை தொடர்ந்து வெளிமாநிலங்களுக்கு சென்று வாங்கி வந்து விற்பனை செய்கின்றனர் என்று தெரிவித்துள்ளார்..
பி.ரஹ்மான் கோவை மாவட்டம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“