கோவை, சரவணம்பட்டி அடுத்து விளாங்குறிச்சி பகுதியில் அமைந்து உள்ள அருள்மிகு மாகாளியம்மன் திருக்கோவிலில் திருக்கல்யாண உற்சவ விழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவிற்காக நேற்று இரவு நடைபெற்ற இன்னிசை நிகழ்ச்சியில் அ.தி.மு.க கோவை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் மற்றும் கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி.அருண்குமார், அம்மா பேரவை இணைச் செயலாளர் மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.ஆர்.ஜெயராம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அவர்களை அ.தி.மு.க வட்டச் செயலாளர்கள் விஜயகுமார் மற்றும் பால்ராஜ் ஆகியோர் இன்னிசை குழுவின் பாடலுக்கு ஏற்ப நடனமாடி சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மாலை அணிவித்து வரவேற்றனர். அப்போது தீடிரென 2 சட்டமன்ற உறுப்பினர்களும் இன்னிசை குழுவின் பாடலுக்கு ஏற்ப நடனம் ஆடி அசத்தினர். இதனைப் பார்த்த பக்தர்கள் பொதுமக்கள் அனைவரும் உற்சாகம் அடைந்தனர்.