மத்திய வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகியுள்ளதால், அடுத்து புயலாக மாற வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் மழை நீடிக்கும் என்பதால், ஒரு சில மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கபட்டுள்ளது.
தென் தமிழக பகுதிகளுக்கு மேல் வலிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வரும் நிலையில, மத்திய வங்கக்கடலில், உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக மாற வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால், கோவை, திருப்பூர், திண்டுக்கல், நெல்லை, தேனி, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில், கடந்த இரு தினங்களாக கனமழை பெய்து வருகிறது.
குறிப்பாக கோவையில் அதிகபட்சமாக 21 மணி நேரத்தில், 9 செ.மீ மழை பதிவாகியுள்ளது. திண்டுக்கல் நீலகிரியில் தலா 6 செ.மீ, திருப்பூரில் 5 செ.மீ மழை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனிடையே, கனமழை காரணமாக கோவை மற்றும் திருப்பூரில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே கோவையில் நேற்று பெய்த கனமழையால் காரமடையில் உள்ள ஓடையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 2 கார்கள் அடித்துச் செல்லப்பட்டது. அதிஷ்டவசமான அதில் பயணித்தவர்கள் உயர் பிழைத்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“