200-க்கு அதிகமான கலைஞர்கள்: வித்தியாசமான கலைபடைப்புகள்: கோவையை கலக்கிய ஆர்ட் ஸ்ட்ரீட் கண்காட்சி!

கோவை உட்பட பல்வேறு மாவட்டத்தை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட கலைஞர்கள் அவர்களது கலைபடைப்புகளை இங்கு காட்சிபடுத்தி உள்ளனர்.

கோவை உட்பட பல்வேறு மாவட்டத்தை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட கலைஞர்கள் அவர்களது கலைபடைப்புகளை இங்கு காட்சிபடுத்தி உள்ளனர்.

author-image
WebDesk
New Update
Arts Of Coimbatore

கோயம்புத்தூர் விழாவை முன்னிட்டு மாநகரத்தில் தினந்தோறும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் கலை தெரு (Art Street) எனும் கண்காட்சி நடைபெற்று வருகிறது. இதில் கோவை உட்பட பல்வேறு மாவட்டத்தை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட கலைஞர்கள் அவர்களது கலைபடைப்புகளை இங்கு காட்சிபடுத்தி உள்ளனர்.

Advertisment

Arts Of Co 3

Arts Of Co 3

இரண்டு நாட்கள் நடைபெறும் கண்காட்சியில் மணல் ஓவியங்கள், களிமண் கலை, மட்பாண்டங்கள், மூங்கில் கூடை, புராண உருவங்களின் சுவரோவியங்கள், கையால் செய்யப்பட்ட தலைகீழ் கண்ணாடி,ரெட்ரோ ஓவியங்கள்,பிச்சுவாய் பெயிண்டிங், கேலிகிராபி, 3டி மாடலிங், காமிக் ஸ்ட்ரிப், குரோச்செட், போன்ற பல்வேறு வகையான கலை படைப்புகள், கிரியேட்டிவ் கேலிகிராபி, 3-டி மோல்ட்ஸ் மற்றும், குறிப்பிடத்தக்க தமிழ் எழுத்தாளர்களின் உருவப்படங்கள் மற்றும் பலவை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

Advertisment
Advertisements

Arts Of Co 3

கண் கவரும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளஇந்த ஆர்ட் ஸ்ட்ரீட் கோவை மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

பி.ரஹ்மான். கோவை மாவட்டம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu Coimbatore

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: