Advertisment

கலைகட்டும் தீபாவளி பண்டிகை: கோவை கடைவீதிகளில் குவிந்த மககள்!

கோவையை பொருத்தவரை , ஆண்டுதோறும் தீபாவளி நேரத்தில் மாநகரம் முழுவதும் பட்டாசுக் கடைகள் அமைக்கப்பட்டு வியாபாரம் செய்யப்படும்.

author-image
WebDesk
New Update
coimbatore 17

நாளை (அக்டோபர் 31) தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் கடைசி நாள் இன்று பொதுமக்கள் பலரும் தீபாவளி பொருட்களை வாங்குவதற்கு ஆர்வம் காட்டினர். கோவையில் கிராஸ் கட் சாலை, டவுன்ஹால் பிரகாசம், ஒப்பணக்கார வீதி உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் ஆர்வமுடன் புத்தாடைகளை வாங்கிச் சென்றனர். பட்டாசு கடைகளிலும் பொதுமக்கள் கூட்டம் சற்று அதிகமாக காணப்பட்டது.  

Advertisment

கோவையில் பொதுமக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தும் வகையிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையிலும் சாலையின் இரு புறங்களிலும் பேரிகேட்டுகளை அமைத்து பொதுமக்கள் அதற்குள்ளாகவே நடக்கும்படி ஏற்பாடு செய்திருந்தது.  இதனால் போக்குவரத்து நெரிசல் பெரிதும் பாதிக்கப்படவில்லை. மேலும் இப்பதிகளில் வாட்ச் டவர் அமைத்து கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

தீபாவளி பண்டிகை நாளில், பொதுமக்கள் பலரும் உறவினர்கள் நண்பர்களுக்கு இனிப்பு பலகாரங்கள் கொடுத்து தீபாவளி பண்டிகை வாழ்த்துக்களை தெரிவிப்பது வழக்கம். இதன் காரணமாக பொதுமக்கள் பலரும் பலகாரங்களை வாங்கி செல்கின்றனர். குறிப்பாக நெய்யால் தயாரிக்கப்பட்ட பலகாரம் பாதாம் முந்திரி உள்ளிட்ட பருப்பு வகைகளை கொண்டு தயாரிக்கப்பட்ட பலகாரம் பால் கொண்டு தயாரிக்கப்பட்ட பலகாரங்களை பொதுமக்கள் அதிகம் விரும்பி வாங்கி செல்கின்றனர். இதனால் பலகார கடைகளில் மக்கள் கூட்டம் அதிகளவு காணப்படுகிறது.

கோவையை பொருத்தவரை , ஆண்டுதோறும் தீபாவளி நேரத்தில் மாநகரம் முழுவதும் பட்டாசுக் கடைகள் அமைக்கப்பட்டு வியாபாரம் செய்யப்படும். அதே போல இந்த ஆண்டு பட்டாசு விற்பனை என்பது படு ஜோராக நடைபெற்று வருகிறது. தீபாவளி நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் பட்டாசுகளை வாங்க இரவிலும் பகலிலும் மக்கள் கடைகளில் குவிந்து வருகின்றனர். 
குறிப்பாக கோவை வடவள்ளி பகுதியில் உள்ள சக்சஸ் என்ற பட்டாசு கடையில் 2500 க்கும் மேல் பட்டாசு வாங்கும் நபர்களுக்கு குலுக்கள் முறையில் பைக்,சைக்கிள்,மிக்ஸி,வெள்ளி நாணயங்கள் என ஆஃபர்களை வழங்கி வருகின்றனர்.

அதே போல குழந்தைகளுக்கான பிரத்தேக விளையாட்டு திடல் அமைக்கப்பட்டு அதில் வெற்றி பெறும் குழந்தைகளுக்கு இலவசமாக பட்டாசுகளும் வழங்கி வருகின்றனர்.  கடந்த சில ஆண்டுகளாக பட்டாசு விற்பனை செய்து வருவதாகவும், முழுக்க முழுக்க லாப நோக்கம் இல்லாமல் சிவகாசி பட்டாசு தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கருதி இந்த பட்டாசு கடையை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

எனவே இங்கு பட்டாசு வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு  பல்வேறு பரிசுகளை வழங்க உள்ளதாக தெரிவித்த அவர் இந்த வருடம் பெரிய வெடிகள் தவிர்த்து  குழந்தைகளுக்கான பிரத்யேகமான புதிய பட்டாசுகள் அறிமுகமாகி உள்ளதாகவும் பசுமை பட்டாசுகளுக்கு அதிகம் முக்கியவதும் அளிக்கப்பட்டு விற்பனை செய்து வருவதாக  பட்டாசு கடை உரிமையாளர்கள் தகவல் தெரிவிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பி.ரஹ்மான். கோவை மாவட்டம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Taminadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment