உலக கழிப்பறை தினத்தை முன்னிட்டு புதிய கழிப்பறைகள், உயர் கல்வி பெற மாணவ மாணவியர்களுக்கு கல்வி நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் மலைவாழ் மக்களின் தேவைகளுக்காக இலவச ஆம்புலன்ஸ் சேவை வழங்கும் முப்பெரும் விழா கோவை சோமையனூர் பகுதியில் உள்ள அரசு மாநகராட்சி பள்ளியில் நடைபெற்றது. இந்த விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார்பாடி மாணவ மாணவியர்களுக்கு கல்வி உதவிகளை வழங்கினார்.
கோவை சோமையனூர் பகுதியில் அரசு துவக்க பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் இன்று நேட்டிவ் மெடிக்கேர் சாரிட்டபிள் ட்ரஸ்ட், மற்றும் என்டிடிவி டாடா அமைப்பின் சார்பாக முப்பெரும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இப்பள்ளியில் உள்ள மாணவ மாணவியர்கள் 100"க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதில் பள்ளியின் தலைமையாசிரியை தமிழ் செல்வி வரவேற்புரையாற்றினார். நஞ்சுண்டாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் கார்த்திகேஸ்வரி சுந்தரராஜ் இத்திட்டம் குறித்து விளக்கவுரையாற்றினார்.
இதனை தொடர்ந்து மாணவ மாணவியர்களின் கல்விக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்ற நேட்டிவ் மெடிக்கேர் சாரிட்டபிள் ட்ரஸ்டு அமைப்பின் நிறுவன தலைவர் சங்கரநாராயண், மாணவர்களுக்கு அளிக்கப்படும் நலத்திட்டங்களால் மாணவர்கள் கடந்த 10 ஆண்டுகளில் அடைந்த சாதனைகளை எடுத்து கூறினார்.
பள்ளி மாணவர்களுக்கு இரவு நேரத்தில் படிப்பை தொடர சிறிய அளவிலான மின் விளக்குகளை மாணவர்களுக்கு என்.டி.டி டாடா அமைப்பின் இயக்குநர்கள் சிவக்குமார் சதாசிவம், மற்றும் சதீஷ் பாபு, ஆகியோர் வழங்கினர்.
பி.ரஹ்மான் கோவை மாவட்டம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“