/indian-express-tamil/media/media_files/2025/08/23/accidenthnh-2025-08-23-18-10-32.jpg)
கோவை சூலூர் அருகே செஞ்சேரிமலை பகுதியில் ஜுவல்லரி பாக்ஸ்களை தயாரிக்கும் தனியார் நிறுவனத்தின் முன்பு கல்லூரி பேருந்தை தனது இருசக்கர வாகனத்தில் முந்த முயன்ற அதே கல்லூரியில் படிக்கும் மாணவி மற்றும் அவரது தம்பி எதிரே வந்த கார் மோதி படுகாயம் அடைந்தனர்.
கோவை மாவட்டம் சூலூர் அருகே செஞ்சேரி மலை மந்திரி பாளையத்தை சேர்ந்தவர் இலக்கியா. அவரது தம்பி சரண். இலக்கியா அவனாசிபாளையம் அருகே உள்ள ஒரு தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் படித்து வருகிறார். வழக்கமாக கல்லூரி பேருந்தில் இவர் கல்லூரிக்கு சென்று வரும் இவர், வியாழக்கிழமை காலை வழக்கம் போல கல்லூரி செல்ல கல்லூரி பேருந்தை பிடிக்க முயன்றுள்ளார். சிறிது காலதாமதமானதால் கல்லூரி பேருந்து சென்றுவிட்டது.
இதன் காரணமாக அவர்களது வீட்டில் உள்ள இரு சக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு பேருந்தை பிடிக்க தனது தம்பியை உடன் அழைத்து கொண்டு சென்றார். போகும் வழியில் கல்லூரி பேருந்து தனக்கு முன்பாக செல்வதை பார்த்து தனது நண்பர்கள் அதில் பயணிப்பதை அறிந்து குதூகலம் அடைந்து உள்ளார். அப்போது கல்லூரி மாணவி தான் படிக்கும் கல்லூரி பேருந்தை முந்தி பேருந்தை நிறுத்தி அதில் ஏறி கல்லூரிக்கு செல்ல முயன்றுள்ளார். அப்போது இருசக்கர வாகனத்தை இலக்கியாவின் தம்பி சரண் ஓடி வந்ததாக கூறப்படுகிறது.
கல்லூரி பேருந்தை சரண் முந்துவதற்கு முயன்ற போது எதிரே வேகமாக வந்த ஒரு கார் மாணவி இலக்கியா மற்றும் அவரது தம்பி சரண் ஆகியோர் மீது பயங்கரமாக மோதியது. இதில் மாணவி மற்றும் அவரது சகோதரர் தூக்கி வீசப்பட்டு சாலையில் விழுந்தனர். விபத்தை ஏற்படுத்திய கார் அங்கு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் பலத்த காயமடைந்த மாணவி மற்றும் அவரது தம்பியை அருகில் இருந்தவர்கள் மீட்டு பொள்ளாச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சம்பவம் பற்றி கேள்விப்பட்ட சுல்தான் பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாணவி மீது மோதிய கார் பற்றிய விவரத்தை விசாரித்தனர். மோதிய காரானது விபத்தில் சிக்கிய மாணவியின் உறவினருடையது. மேலும் காரை ஓட்டி வந்த நபர் குமாரபாளையத்தை சேர்ந்தவர் என தெரியவந்தது. இது பற்றி வழக்கு பதிவு செய்த சுல்தான்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.