கோவை மாவட்டம் பாப்பநாயக்கன் பாளையம், என்.ஜி.ராமசாமி சாலையில் அமைந்துள்ள வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்க நியாய விலைக் கடை, லட்சுமி மில் பணியாளர் கூட்டுறவு பண்டக சாலை நியாய விலைக் கடை, 100 அடி சாலையிலுள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக நியாய விலைக் கடை ஆகியவற்றை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வில் மொத்த குடும்ப அட்டைகளின் எண்ணிக்கை, குடும்ப அட்டைதாரர்களுக்கு விநியோகிக்கப்பட்ட விவரம் குறித்த பதிவுகளை விற்பனை முனைய இயந்திரத்தினை இயக்கி ஆய்வு செய்ததுடன், இருப்பு வைக்கப்பட்டுள்ள அரிசி, பாமாயில், பருப்பு உள்ளிட்ட பொருட்களின் இருப்பு விவரங்களையும் கேட்டறிந்து, குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட வேண்டிய பொருட்களை உரிய நேரத்தில் வழங்கவும் விற்பனையாளர்களிடம் அறிவுறுத்தினார்.
பி.ரஹ்மான். கோவை மாவட்டம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“