கோவை மாவட்ட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அம்மன் அர்சுணன்(வடக்கு) தாமோதரன்(கிணத்துக்கடவு), கந்தசாமி(வால்பாறை), கந்தசாமி(சூலுர்) ஆகியோர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோவை மாவட்டத்தில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளில் தங்களை புறக்கணிப்பதாக தெரிவித்தனர்.
மேலும் அரசு நிகழ்ச்சிகளில் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டு நடத்துவதாக கூறிய அவர்கள், திமுகவினர் மாநகராட்சி நிர்வாகம் கூறியதை மீறியும் பல்வேறு இடங்களில் போஸ்டர்களை ஒட்டியுள்ளதாகவும் அதனை அகற்றவில்லையெனில் நாங்களும் ஒட்டுவோம் என தெரிவித்தனர்.

மேலும் கோவையில் சர்வாதிகார ஆட்சி நடக்கிறதா என சந்தேகம் எழுகிறது. எனவே இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
தொடர்ந்து செய்தியார்களை சந்தித்த கோவை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜுணன், அரசு திட்ட விழாகளில் தங்களை அழைப்பதில்லை. உதாரணத்திற்கு மருதமலை கோவிலில் மண்டபம் கட்டும் பணிக்கான பூஜை நடத்தும் போது சட்டமன்ற உறுப்பினரையும் அப்பகுதி வார்டு கவுன்சிலர்(அதிமுக) அழைக்காமல் திமுக பகுதி செயலாளரை வைத்து அந்நிகழ்ச்சியை நடத்தியுள்ளனர்.
இதேபோல் கிணத்துக்கடவு தொகுதியில் பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினரை சில பள்ளிகளில் மட்டும் அழைப்பதாகவும் சில பள்ளிகளில் அழைக்காமலேயே நிகழ்ச்சிகளை நடத்துவதாகவும் ஒன்றிய செயலாளரே அதனை வழங்கிவிட்டு நீங்கள் வர அவசியம் என தெரிவிப்பதாக கூறிய அவர் இதுபோன்று சட்டமன்ற உறுப்பினர்களை அவமானப்படுத்துவது தான் திராவிட மாடலா? என கேள்வி எழுப்பினார்.

மேலும் தங்களுக்கு நீதிமன்றத்தில் இருந்து மாபெரும் வெற்றி கிடைத்துள்ளது. எடப்பாடியாரிடம் இது குறித்து தெரிவித்து விட்டு போராட்டம் நடத்த முடிவு செய்து உள்ளோம். தங்களது கோரிக்கைகளை மாவட்ட ஆட்சியரும் பரிசீலிப்பதாக கூறியதாக தெரிவித்த அவர்,மேலும் அவிநாசி சாலை மேம்பாலங்களில் போஸ்டர்கள் ஒட்டி உள்ளதற்கு போலீஸ் பாதுகாப்பு அளிப்பதாகவும் தாங்கள் போஸ்டர்கள் ஒட்ட சென்றால் போலீசார் தங்களை தடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் கோவையில் நடைபெறுவது திராவிட மாடல் ஆட்சியா என தெரியவில்லை. இங்கு அரசாங்கம் நடப்பதில்லை. கட்சி ஆட்சிதான் நடக்கிறது. மேலும் இங்கு நடைபெறும் அரசு விழாக்களில் மாவட்ட நிர்வாக அழைப்பிதழ்களில் சட்டமன்ற உறுப்பினர்களின் பெயர் இருக்கிறது. ஆனால் தங்களை அழைப்பதில்லை என தெரிவித்தார். குறிப்பாக வெள்ளலூர் பேருந்து நிலைய கேள்விக்கு பதில் அளித்த அவர் எங்கள் தலைமை என்ன முடிவு எடுக்கிறதோ அதன்படி செயல்படுவோம் என பதிலளித்தார்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil