பெண் மருத்துவரிடம் அத்துமீறல் - மருத்துவர்கள் போராட்டம்..!
கோவை அரசு மருத்துவமனையில் வடமாநில வாலிபர் பெண் மருத்துவரிடம் அத்துமீறியதாகக் கூறி மருத்துவர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கொல்கத்தாவில் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதன் தொடர்ச்சியாக மத்தியப் பிரதேச மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் வெடித்துள்ளது. நேற்று இரவு சம்மந்தப்பட்ட மருத்துவமனையைப் போராட்டக்காரர்கள் சூறையாடினர்.
இந்நிலையில், கோவை அரசு மருத்துவமனைக்கு நேற்றிரவு வந்த மயங் கலார் என்ற 23 வயது வடமாநில வாலிபர் பெண் மருத்துவரிடம் அத்துமீறியதாகக் கூறப்படுகிறது. இதனைக் கண்டித்தும், கொல்கத்தா சம்பவத்தைக் கண்டித்தும் இன்று மருத்துவமனை வளாகத்திற்குள் மருத்துவர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.
இதனிடையே, சம்மந்தப்பட்ட நபர் மன நிலை பாதிக்கப்பட்டவர் என்றும், இதுவரை மருத்துவமனை தரப்பில் புகார் அளிக்கப்படவில்லை என்றும் போலீசார் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து அனைத்து மருத்துவமனைகள், மருத்துவக்கல்லூரிகளிலும் பாதுகாப்பை பலப்படுத்த மருத்துவ கவுன்சில் அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“