கோவை மருதமலை அடிவாரத்தில் பாரதியார் பல்கலைக் கழகத்தின் மேற்குப் பகுதியில் பெண் யானை ஒன்று இன்று உடல்நலக் குறைவு காரணமாக தரையில் விழுந்து கிடந்தது. வனத் துறையினர் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த போது போளுவாம்பட்டி காப்பு காட்டிற்கு அருகில் குட்டியுடன் நீண்ட நேரமாக ஒரே இடத்தில் இருந்த யானை சிறிது நேரத்திலேயே சோர்வு அடைந்து கீழே விழுந்தது.
இந்த சம்பவம் குறித்து உடனடியாக மாவட்ட வன அலுவலருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவரது ஆலோசனைப்படி ஆனைமலை புலிகள் காப்பகத்தைச் சேர்ந்த கள இயக்குனர் மற்றும் வனப் பாதுகாவலர்கள், கோவை வனச்சரக அதிகாரிகளுடன் இணைந்து அந்த தாய் யானையின் உடல்நிலையை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். மேலும் கால்நடை மருத்துவக் குழுவினரும் வனத் துறையினரும் இணைந்து யானைக்கு தேவையான சிகிச்சைகளை அளித்து வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர்.
பி.ரஹ்மான் கோவை மாவட்டம்.