மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்தவர் தினேஷ். கண்பார்வை இல்லாத மாற்றுத்திறனாளியான இவர், தற்போது கோவையில் வசித்து வருகிறார். இவர் பா.ஜ.கவுக்கு எதிராக கோவை நாடாளுமன்ற தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்ய வந்திருந்தார். அப்போது அவரிடம் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் தனியாக வந்தது ஏன் என்று கேள்வி எழுப்பிய நிலையில், தனது நண்பர்கள் வருவதாக சொன்ன நிலையில் தற்போது வரை வராமல் அலக்கழிப்பதாக தெரிவித்தார்.
மேலும் மத்திய அரசு 10 ஆண்டுகளாக எதுவும் செய்யவில்லை.அரசு வழங்கும் 1500 ரூபாய் உதவித்தொகை எப்படி வாழ்வாதாரத்திற்கு போதுமானதாக இருக்கும் என்று கேள்வி எழுப்பிய அவர், தனக்கு தொழில் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்து தர முடியுமா எனவும் கேள்வி எழுப்பினார்.
மேலும் தனது கோரிக்கையை மாவட்ட ஆட்சியரிடம் மட்டுமே தெரிவிப்பதாக கூறிய அவரை, காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்து அனுப்பி வைத்தனர். குறிப்பாக உணவு இன்றி இருந்த அவருக்கு மதிய உணவு வாங்கி கொடுத்து காவல் துறையினர் அனுப்பி வைத்தனர்.
பி.ரஹ்மான் கோவை மாவட்டம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“