கோவை மாநகரில் பல்வேறு பகுதிகளில் பாதாள சாக்கடை பணிகள், குடிநீர் குழாய் பதிக்கும் பணிகள், சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகின்றன. பணிகள் முடிந்த பிறகு சோதனை செய்வதற்காக சரிவர மூடப்படாமல் விடப்படுகிறது.
இந்நிலையில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் முடிந்து மூடாமல் விடப்பட்ட சாலையில் அரசு பேருந்து சிக்கி கொண்டுள்ளது. கோவை மதுக்கரை மார்க்கெட் சாலையில் அரசு பேருந்து சக்கரங்கள் மண்ணில் சிக்கி கொண்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. காந்திபுரத்தில் இருந்து கண்ணம்மா நாயக்கனூர் வரைக்கும் செல்லக்கூடிய "TN 38N 2859"எண் கொண்ட பேருந்து சாலையில் ஏற்பட்ட பள்ளத்தில் சக்கரம் சிக்கிக் கொண்டது.
பாதாள சாக்கடை அமைப்பதற்கு சாலையில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் முடித்து பள்ளங்கள் சரியாக மூடப்படாததால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த போக்குவரத்துறையினர் கிரேன் மூலம் பேருந்தை மண்ணில் புதைந்த பேருந்து மீட்டனர் பின்னர் போக்குவரத்து சரி செய்யப்பட்டது.
பி.ரஹ்மான். கோவை மாவட்டம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“