Advertisment

பிரேத பரிசோதனை முடிந்து உடல்களை மாற்றி கொடுத்த ஊழியர்கள் : கோவை மருத்துவமனையில் பரபரப்பு

கோயம்புத்தூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்தபோது 2 உடல்களை மாற்றி கொடுத்துவிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
Coimbatore Hosp

கோயம்புத்தூர்

ஈரோடு மாவட்டம் சூரம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மணி (65). இவர் கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் நேற்று இவர் சிகிச்சை பலனின்றி உயிரிந்தார். அவருடைய உடல் நேற்று மாலை பிரேத பரிசோதனைக்கு பிறகு தருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளார்.

Advertisment

அதன்படி நேற்று மாலை உடலை திருப்பி கொடுத்த மருத்துவமனை நிர்வாகம், திருப்பூர் மாவட்டம் அவினாசி பாளையம் பகுதியைச் சேர்ந்தவரிடம் உயிரிழந்த மணியின் உடல் மாறுதலாக எடுத்துக் கொடுத்துள்ளார். அவர்களும் சரியாக பார்க்காமல், உடலை வாங்கிக் கொண்டு சென்றுள்ளனர். பின்னர் ஒரு மணி நேரத்துக்கு பிறகு உடல் மாற்றி கொடுக்கப்பட்டிருப்பதாகவும் திருப்பூரை சேர்ந்தவர்கள் தவறுதலாக வாங்கிக் கொண்டு சென்று விட்டதாக தெரியவந்துள்ளது.

இதனையடுத்து அவர்களை தொடர்பு கொண்ட போது அவர்களுடைய செல்போன் அழைப்பை யாரும் எடுக்காததால் இது குறித்து பந்தய சாலை போலீசாரிடம் புகார் தெரிவிப்பட்டது. சம்பவம் குறித்து பந்தய சாலை காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் உடல்கள் மாற்றி கொடுக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. அதே சமயம் ஈரோடு சூரம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர்கள் நேற்று மாலையிலிருந்து இன்று காலை 12 மணி வரைக்கும் உடலை வாங்குவதற்கு காத்திருந்தனர்.

Coimbatore Hosp

போலீசார் விசாரணை நடத்தியதில் மாறுதலாக உடலை எடுத்துச் சென்றவர்கள் தங்களுடைய தந்தை என இறுதி சடங்கு நடத்தி இருப்பது தெரியவந்தது. இரு தரப்பினரும் போலீசார் மட்டும் மருத்துவமனை அதிகாரிகள் மத்தியில் வைத்து பேச்சு வார்த்தை நடத்திய போது, இருவரும் ஒரு உடலமைப்புடன் இருந்ததும் வயதானவராக இருந்தால் சரியாக அடையாளம் காண முடியாத தந்தை என எண்ணி இறுதிச்சடங்கு நடத்தி விட்டோம் என கூறியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து மற்றொரு தரப்பு உடலுக்கு பதிலாக அவர்கள் கொண்டு வந்த அஸ்தியை வாங்கிக்கொண்டு சென்றனர். பாதிக்கப்பட்டவர்கள் உடலை மாற்றி கொடுத்து விட்டதாகவும் வீட்டில் இருந்து இன்று காலை வரை காத்திருந்தும் எங்கள் தந்தையின் உடல் கொடுக்கப்படவில்லை என உறவினர்கள் குற்றச்சாட்டு வைத்தனர்.

Coimbatore Hosp

இது குறித்து மருத்துவமனை நிர்வாகம் கூறும் போது, உடல் மாற்றி கொடுக்கப்பட்டு சம்பவம் உண்மைதான், இரண்டு பேருடைய உடல் அமைப்பு ஒரு மாதிரியாக அடையாளங்கள் இருந்தால் இந்த தவறு நடந்திருப்பதாகவும், ஆனால் உடலை வாங்கிச் சென்றவர்கள் சரியாக கவனிக்காததால் இந்த தவறு நடந்திருப்பதாக தெரிவித்தனர். 

மேலும் இது தொடர்பாக  ஊழியர்களிடம் விசாரணை நடத்தப்படும் எனவும் தெரிவித்தனர்.  மேலும் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுடைய அடையாளங்களை வெளியிட வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டதாக தெரிவித்தார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu Coimbatore
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment