கோவை, மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள கோவை குற்றாலத்தில் விடுமுறை தினம் என்பதால் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். சுற்றுலா பயணிகள் வசதிக்காக வனத்திற்குள் அழைத்துச் செல்ல கூடுதல் வாகனங்களும் இயக்கப்பட்டன. அதிக அளவில் மக்கள் படையெடுத்த நிலையில் நீண்ட வரிசையில் பலரும் காத்து இருந்து அருவியில் குளிக்க சென்றனர்.
குளிக்கும் இடத்திலும் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் குவிந்த நிலையில் வெளியே இருக்கும் கூட்டத்தையும், மேற்கொண்டு ஒரே இடத்தில் சுற்றுலா பயணிகள் குவிவதை கட்டுப்படுத்தவும் வனத்துறை ஊழியர்களுக்கு சவால் ஏற்பட்டது. இந்த நிலையில் கூட்டத்தை கட்டுப்படுத்தி, நெரிசலை தவிர்க்க வனத் துறையினர் அபாய சங்கை ஒலிக்க செய்தனர்.
தண்ணீர் அதிகம் இருக்கும் இடத்தில் மக்கள் கூட்டம் நெரிசலில் சிக்கிக் கொள்வதை தவிர்க்க அபாய சங்கு ஒலிக்கப்பட்ட நிலையில், பலரும் பதற்றம் அடைந்தனர். இதனை அடுத்து விசில் அடிக்கும் ஒலிபெருக்கி மூலம் கூறியும் சுற்றுலா பயணிகளுக்கு அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டது.