/indian-express-tamil/media/media_files/2025/02/18/TPLLkkgIcxMuwYV2kcjH.jpg)
-
Mar 26, 2025 06:15 IST
திருப்பூரில் பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்த வங்கதேசத்தைச் சேர்ந்த 2 பேர் கைது
திருப்பூர் மாவட்டம், கருப்பகவுண்டம் பாளையம் பகுதியில் சட்ட விரோதமாக தங்கியிருந்து பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்த வங்கதேசத்தைச் சேர்ந்த ராபின் ஹுசைன் (32), இஸ்ஸாக் அலி (25) ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உரிய ஆவணங்கள் இன்றி சட்ட விரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்து, திருப்பூருக்கு வந்து வேலை செய்து வந்துள்ளனர்.
-
Mar 25, 2025 18:33 IST
தனியார் பள்ளி ஆசிரியர் போக்சோவில் கைது
திருப்பூரில் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத வந்த மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தனியார் பள்ளி ஆசிரியர் சம்பத் குமார் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். சோதனை செய்வதாகக் கூறி பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவிகள் புகார் அளித்ததன் பேரில், போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.
-
Mar 25, 2025 14:50 IST
நகரமைப்பு பிரிவு உதவியாளர் கைது
ஈரோடு, கோபிச்செட்டிப்பாளையத்தில் கட்டட அனுமதிக்கு ரூ.30,000 லஞ்சம் வாங்கிய நகரமைப்பு பிரிவு உதவியாளர் கைது
வருண் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் கையும் களவுமாக கைது செய்த லஞ்ச ஒழிப்பு போலீசார் -
Mar 25, 2025 13:53 IST
தாய்ப்பால் குடித்தபோது குழந்தை மூச்சுத்திணறி உயிரிழப்பு
திருத்தணி அருகே தாய்ப்பால் குடித்தபோது மூச்சுத்திணறி உயிரிழந்த பச்சிளங் குழந்தை. 2 மணி நேரமாக குழந்தை அசைவற்று இருந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாக தகவல்; குழந்தையை பரிசோதித்த மருத்துவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளார்
-
Mar 25, 2025 13:31 IST
சிவகங்கை: பயிற்சி மருத்துவர்கள் பணிப் புறக்கணிப்பு
சிவகங்கை மருத்துவக்கல்லூரி வளாகத்தில் பயிற்சி பெண் மருத்துவர் மீது தாக்குதல் நடந்துள்ள சம்பவத்தைக் கண்டித்து பயிற்சி. மருத்துவர்கள் பணிப் புறக்கணிப்பு போராட்டம் பயிற்சி பெண் மருத்துவர் நேற்றிரவு பணி முடிந்து விடுதிக்கு சென்றபோது மர்ம நபர் முகத்தை மூடி தாக்குதல்
-
Mar 25, 2025 12:07 IST
வெள்ளியங்கிரி மலையேறிய பக்தர் பலி
கோவை மாவட்டம் வெள்ளியங்கிரி மலையேறி திரும்பிய பக்தர் உயிரிழந்தார். வெள்ளியங்கிரி மலையேறிய திருவண்ணாமலையை சேர்ந்த பக்தர் சிவா உயிரிழந்தார். மலையேறி விட்டு திரும்பிய நிலையில் 3வது மலையில் மயங்கி விழுந்து பலியானார்.
-
Mar 25, 2025 11:35 IST
ரம்ஜானை முன்னிட்டு களை கட்டிய தென்னிந்தியாவின் புகழ்பெற்ற பொள்ளாச்சி மாட்டுச்சந்தை வியாபாரம்
ரம்ஜானை முன்னிட்டு களை கட்டிய தென்னிந்தியாவின் புகழ்பெற்ற பொள்ளாச்சி மாட்டுச்சந்தையில் ஒரே நாளில் ரூ. 5 கோடிக்கு மேல் வர்த்தகம் நடைபெற்றது. கர்நாடகா, ஆந்திரா,தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து, சந்தைக்கு 3,000-க்கும் மேற்பட்ட மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன.
-
Mar 25, 2025 11:13 IST
முறையான பாதுகாப்பு வழங்க கோரி வலியுறுத்தல்
பெண் பயிற்சி மருத்துவர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக பணியை புறக்கணித்து பயிற்சி மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். முறையாக சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்படவில்லை என குற்றம் சாட்டியுள்ளனர்.
-
Mar 25, 2025 10:40 IST
அரசுப் பேருந்து நிற்காமல் சென்ற சம்பவம்- ஓட்டுநர் சஸ்பெண்ட்
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே கொத்தக்கோட்டையில் பள்ளி மாணவியை ஏற்றாமல் சென்ற அரசு பேருந்து ஓட்டுநர் சஸ்பென்ட் செய்யப்பட்டார். ஓட்டுநர் முனிராஜ் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசு போக்குவரத்துக் கழகம் உறுதியளித்துள்ளது. பள்ளி செல்வதற்காக மாணவி பேருந்தின் பின்னால் ஓடிய காட்சி வெளியான நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
-
Mar 25, 2025 10:12 IST
"மார்ச் 29-ம் தேதி சனிப்பெயர்ச்சி இல்லை"
வரும் 29-ம் தேதி சனிப்பெயர்ச்சி இல்லை என்று திருநள்ளாறு கோயில் தேவஸ்தானம் விளக்கம் அளித்துள்ளது. மார்ச் 29-ம் தேதி சனி பெயர்ச்சி நிகழும் என்ற தகவல்கள் பரவலாக வெளிவந்துள்ளன. திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோயிலில் வாக்கிய பஞ்சாங்கம் முறையை பின்பற்றுவதை தெளிவுபடுத்துகிறோம். பாரம்பரிய கணிப்பு முறையின்படி 2026-ம் ஆண்டுதான் சனி பெயர்ச்சி நடைபெறும் என தெரிவித்துக் கொள்கிறோம்.
-
Mar 25, 2025 09:46 IST
வாணியம்பாடி: நிற்காமல் சென்ற அரசுப்பேருந்து - ஓடி ஏறிய மாணவி
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே நிற்காமல் சென்ற அரசுப் பேருந்தில் தேர்வுக்கு சென்ற பிளஸ் 2 மாணவி ஒருவர் ஓடிச் சென்று ஏறிய காட்சிகள் வைரலாகி வருகிறது. கொத்தகோட்டை பகுதியில் 12ம் வகுப்பு மாணவி தேர்வு எழுத பேருந்திற்காக காத்திருந்தார். திருப்பத்தூரில் இருந்து வாணியம்பாடி வழியாக ஆலங்காயம் செல்லும் அரசு பேருந்து நிற்காமல் சென்றுள்ளது.
-
Mar 25, 2025 07:51 IST
மந்தி பிரியாணி சாப்பிட்ட 17 பேருக்கு உடல்நலம் பாதிப்பு
நாகர்கோவிலில், ஓட்டலில் வாங்கிய மந்தி பிரியாணியை சாப்பிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 17 பேருக்கு உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டதாக புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பாக சம்மந்தப்பட்ட ஓட்டலில் சோதனை செய்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பொருட்களை ஆய்வுக்கு அனுப்பினர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.