Coimbatore, Madurai, Trichy News Live Updates: தேனி அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் மீண்டும் காட்டுத் தீ

கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட அனைத்து மாவட்ட செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Fire at western ghats

மேட்டூர் அணைக்கு இன்று காலை நிலவரப்படி நீர் வரத்து, விநாடிக்கு 318 கன அடியாக குறைந்துள்ளது.அணையின் நீர் மட்டம் 110.06 அடியாகவும், நீர் இருப்பு 78.494 டி.எம்.சி. ஆகவும் உள்ளது. அணையில் இருந்து விநாடிக்கு 500 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது

  • Feb 17, 2025 20:45 IST

    நீலகிரி மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

    நீலகிரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவோர் மீது அதிகபட்ச அபராதத் தொகை விதிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு தெரிவித்துள்ளார். மேலும், தடையை மீறி பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் உடனடியாக மூடி சீல் வைக்கப்படும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.



  • Feb 17, 2025 20:00 IST

    மேற்கு தொடர்ச்சி மலையில் மீண்டும் காட்டுத் தீ

    தேனி அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் மீண்டும் காட்டுத் தீ ஏற்பட்டது. அதன்படி, டி.சுப்புலாபுரம் நாழிமலை பகுதியில் நேற்று மாலை முதல் 7 இடங்களில் காட்டு தீ ஏற்பட்டது. இதனை அணைத்த நிலையில், இன்று மீண்டும் 2 இடங்களில் காட்டு தீ ஏற்பட்டுள்ளது.



  • Advertisment
  • Feb 17, 2025 17:52 IST

    சராய வியாபாரிகளால் 2 பேர் படுகொலை; பெரம்பூர் காவல் ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

    மயிலாடுதுறையில் பெரம்பூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட முட்டம் கிராமத்தில் பிப்ரவரி 14-ம் தேதி சாராய வியாபாரிகளால் இரண்டு இளைஞர்கள் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் எதிரொலியாக பெரம்பூர் காவல் ஆய்வாளராக பணியாற்றி வந்த நாகவள்ளி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சுவாமிமலை காவல் ஆய்வாளர் மலைச்சாமி பெரம்பூர் காவல் நிலைய ஆய்வாளரக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.



  • Feb 17, 2025 16:27 IST

    யு.ஜி.சி அறிக்கையை திரும்பப் பெற வலியுறுத்தி தபால் அலுவலகம் முற்றுகை; மாணவர் சங்கத்தினர் 25 பேர் கைது

    மாநில அரசின் உரிமையை பறிக்கும் யு.ஜி.சி அறிக்கையை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தி, திருப்பூர் தலைமை தபால் அலுவலகத்தை முற்றுகையிட்ட இந்திய மாணவர் சங்கத்தினர் 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். யு.ஜி.சி அறிக்கையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தியும், புதிய கல்விக் கொள்கையை ஏற்காவிட்டால் தமிழ்நாட்டிற்கு நிதி வழங்க முடியாது என பேசிய ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை கண்டித்தும் கண்டன முழக்கம் எழுப்பப்பட்டது. 



  • Advertisment
    Advertisements
  • Feb 17, 2025 15:57 IST

    சிவகங்கையில் பள்ளி சிறுமி, மூதாட்டி என 7 பேரை கடித்து குதறிய வெறி நாய்கள்

    சிவகங்கை மாவட்டம் ராஜகம்பீரம் கிராமத்தில் பள்ளி சிறுமி, மூதாட்டி என 7 பேரை கடித்து வெறி நாய்கள் குதறினர். ஒரு மாதத்தில் 20-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்



  • Feb 17, 2025 15:30 IST

    பென்னாகரம் அருகே சாலை விபத்தில் பெண் மரணம்

    பென்னாகரம் அருகே உள்ள பொத்தானூரில் 100 நாள் வேலைக்கு, சாலையோரம் நடந்து சென்ற இரண்டு பெண்கள் மீது அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் ராதா என்ற பெண் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த லட்சுமி என்பவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்தை ஏற்படுத்திய நபரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்



  • Feb 17, 2025 13:28 IST

    "எனக்காக யாரும் பரிந்துபேசத் தேவையில்லை: ராஜன் செல்லப்பாவுக்கு ஒ.பி.எஸ் பதிலடி

    6 மாதம் அமைதியாக இருந்தால் அதிமுகவில் சேர்க்கக்கூறி பரிந்துரைக்கிறோம் என ராஜன் செல்லப்பா கூறியது பற்றிய கேள்விக்கு மதுரையில் பதில் அளித்த முன்னாள் முதல்வர் ஒ.பன்னீர்செல்வம், "எனக்காக யாரும் பரிந்துபேசத் தேவையில்லை. என்னை அதிமுகவில் சேர்க்கும்படி யாரிடமும் நான் கேட்கவில்லை என்று கூறியுள்ளார்.



  • Feb 17, 2025 12:58 IST

    கறம்பக்குடி அருகே பெட்டிக்கடை சூறை - 3 பேர் கைது

    புதுக்கோட்டை: கறம்பக்குடி அருகே தண்ணீர் பாட்டில் வாங்கிய தகராறில் பெட்டிக்கடையை தாக்கிய ஓபிஎஸ் ஆதரவாளர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சுக்கிரன் விடுதியில் உள்ள பெட்டிக்கடையில் தண்ணீர் பாட்டில் வாங்கியபோது தகராறு; கூலிங்கா, சாதா வாட்டரா என கடையில் இருந்த முதியவர் இருமுறை கேட்டதால் தகராறு ஏற்பட்டுள்ளது. 



  • Feb 17, 2025 12:55 IST

    மார்ச் 4ம் தேதி பொதுவிடுமுறை அளிக்க கோரிக்கை

    அய்யா வைகுண்டர் அவதார தினவிழாவான மார்ச் 4ம் தேதி பொதுவிடுமுறை அளிக்க வேண்டும் என கன்னியாகுமரியில் அமைச்சர் தங்கம் தென்னரசுவிடம், திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் தாமரைபாரதி கோரிக்கை விடுத்துள்ளார். 



  • Feb 17, 2025 12:45 IST

    தெரு நாய்கள் கடித்து உயிரிழந்த ஆடுகளுக்கு இழப்பீடு வழங்கப்படும்

    தெரு நாய்களை கட்டுப்படுத்த ஈரோடு, திருப்பூர் ஆட்சியர்கள் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தெரு நாய்கள் கடித்து உயிரிழந்த ஆடுகளுக்கு இழப்பீடு வழங்கப்படும் என்று அமைச்சர் முத்துசாமி உறுதியளித்துள்ளார். 



  • Feb 17, 2025 11:51 IST

    காரைக்கால்: மீனவர்கள் ரயில் நிலையத்தில் போராட்டம்

    இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்க கோரி காரைக்கால் ரயில் நிலையத்திற்குள் மீனவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மீனவர்கள் தண்டவாளத்தில் தலையை வைத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 



  • Feb 17, 2025 11:41 IST

    திருப்பரங்குன்றம் மலையேற எல்.முருகனுக்கு அனுமதி

    திருப்பரங்குன்றம் மலை மீது ஏறிச் செல்ல மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உள்பட 4 பேருக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மலை மீது உள்ள காசி விஸ்வநாதர் கோயிலுக்குச் செல்ல பாஜக தொண்டர்களுடன் சென்றார் எல்.முருகன்; தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்திய காவலர்கள் எல்.முருகன் உள்பட 4 பேருக்கு மட்டுமே அனுமதி அளித்தனர்.



  • Feb 17, 2025 11:19 IST

    தடுப்பணை கட்டும் பணியின் போது கண்டெடுக்கப்பட்ட சிலை

    சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதியில் வைகை ஆற்றில் தடுப்பணை கட்டும் பணியின் போது ஒரு சிலை கண்டெடுக்கபட்டுள்ளது. இது 7ம் நூற்றாண்டைச் சேர்ந்த சிலையாக இருக்கலாம் என தகவல். வருவாய்த்துறை அதிகாரிகள் சிலையை பார்வையிட்டுச் சென்றுள்ளனர்



  • Feb 17, 2025 11:10 IST

    “திருப்பரங்குன்றம் மலை முருகனுக்கே சொந்தம்”

    திருப்பரங்குன்றம் மலை முருகப்பெருமானுக்கே சொந்தமானது என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது; சிக்கந்தர் மலை என்று தவறாக குறிப்பிட்டுள்ளனர் திருப்பரங்குன்றம் சைவத் திருத்தலம்; வைணவ, சைவ தளத்தில் பலியிடும் சம்பவங்கள் கிடையாது என்று மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளார். 



  • Feb 17, 2025 10:57 IST

    ஆண் யானை பலி - வனத்துறை விசாரணை

     ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே அத்தாணி பொன்னாச்சி அம்மன் கோவில் வனப்பகுதியை ஒட்டிய விவசாய நிலத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட மின்சார வேலியில் சிக்கி ஆண் யானை உயிரிழந்ததையடுத்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.



  • Feb 17, 2025 10:08 IST

    பள்ளி புறக்கணிப்பு போராட்டத்தை கைவிட்ட மாணவர்கள்

    திருவாரூர் ஆதியன் பழங்குடி சான்றிதழ் வழங்க வலியுறுத்தி கடந்த 20 நாட்களாக பள்ளி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் மீண்டும் பள்ளிக்கு சென்றனர்.



  • Feb 17, 2025 10:01 IST

    நாழிமலைப் பகுதியில் வேகமாக பரவும் காட்டுத்தீ

    தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே நாழிமலைப் பகுதியில் வேகமாக பரவும் காட்டுத்தீ 7 வெவ்வேறு இடங்களில் பற்றி எரியும் காட்டுத்தீயால் பல வகையான மரங்கள் எரிந்து சேதமடைந்தன.  வருவாய்த்துறைக்கு சொந்தமான இப்பகுதியில் தீயை கட்டுக்குள் கொண்டுவர வருவாய்த்துறையினர் முயற்சி செய்து வருகின்றனர்.



  • Feb 17, 2025 10:00 IST

    கணவரை, குளவிக்கல் கொண்டு அடித்துக்கொன்ற மனைவி கைது

     கும்பகோணம் அருகே ராமகிருஷ்ணா நகர் பகுதியில் கணவரை, குளவிக்கல் கொண்டு அடித்துக்கொன்ற மனைவி கைது பெண்ணிடம் தொடர்பு இருந்தது தொடர்பாக, கணவர் அன்பரசன் (42) மனைவி கலைவாணி (38) இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்றிரவு கணவரை குளவிக்கல் கொண்டு கலைவாணி அடித்துக்கொலை செய்துள்ளார் அன்பரசனின் உடலைக் கைப்பற்றிய போலீசார் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



  • Feb 17, 2025 09:59 IST

    ஆடுகளை கடித்த நாய்கள்

    ஈரோட்டில் சென்னிமலை அருகே சில தினங்களுக்கு முன்பு 20 ஆடுகளை, நாய்கள் கடித்துக்கொன்ற நிலையில், நேற்றிரவு பட்டியில் அடைக்கப்பட்டிருந்த 15 ஆடுகளை கூட்டமாக வந்த நாய்கள் கடித்துக்கொன்றுள்ளன



  • Feb 17, 2025 09:24 IST

    வரவு - செலவு பார்க்கும் இடமல்ல: மதுரையில் அஸ்வின் பேச்சு

    மதுரையில் நடந்த நிகழ்ச்சியில் ஒன்றில் பங்கேற்ற கிரிக்கெட் வீரர் அஸ்வின், கிரிக்கெட் விளையாட்டு என்பது வரவு - செலவு கணக்கு பார்க்கும் இடமல்ல. மகிழ்ச்சி கிடைக்கும் என்ற எண்ணத்தில் விளையாடியதால், சாதிக்க முடிந்தது என்று கூறியுள்ளார்.



  • Feb 17, 2025 09:22 IST

    ஈரோடு சென்னிமலை அருகே 15 ஆடுகளை கடித்து கொன்ற நாய்கள்

    ஈரோடு: சென்னிமலை அருகே சில தினங்களுக்கு முன்பு 20 ஆடுகளை, நாய்கள் கடித்துக்கொன்ற நிலையில், நேற்றிரவு பட்டியில் அடைக்கப்பட்டிருந்த 15 ஆடுகளை கூட்டமாக வந்த நாய்கள் கடித்துக்கொன்றுள்ளன. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது,



Coimbatore Trichy

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: