/indian-express-tamil/media/media_files/kodaikanal-2.jpg)
கடலூரில் சாலையோரம் லாரியை நிறுத்தி ஓய்வெடுத்த டிரைவரை தாக்கி பணம் பறிப்பு : திண்டிவனத்தில் இருந்து குறிஞ்சிப்பாடிக்கு ஜல்லி ஏற்றிக்கொண்டு லாரியை, தம்பிப்பேட்டையில் சாலையோரம் நிறுத்திய ஓட்டுநர் ஓய்வு எடுத்தபோது, அங்கு வந்த 2 மர்ம நபர்கள் லாரியின் கண்ணாடியை உடைத்தும், டிரைவரை தாக்கியும் டிரைவரின் செல்போன் மற்றும் ரூ.25,000 பணத்தை பறித்து சென்றுள்ளனர். கடந்த 2ம் தேதி நடந்த சம்பவத்தில், மொட்டை விஜய் என்பவர் என்கவுன்ட்டர் செய்யப்பட்டார் தற்போது மீண்டும் லாரி டிரைவரை தாக்கி பணம் பறிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
Apr 13, 2025 15:46 IST
தொடர் விடுமுறை: கொடைக்கானலில் குவிந்துள்ள சுற்றுலா பயணிகள்
தொடர் விடுமுறையையொட்டி கொடைக்கானலுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் படையெடுத்துள்ளதால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது
-
Apr 13, 2025 15:21 IST
ராணிப்பேட்டையில் நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகிய 50 பேர் தி.மு.கவில் இணைப்பு
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு மேற்கு ஒன்றியத்தில் நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகிய 50க்கும் மேற்பட்டோர் அமைச்சர் ஆர்.காந்தி முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.
-
Apr 13, 2025 14:48 IST
தமிழ்நாட்டில் அ.தி.மு.க கூட்டணியை பா.ஜ.க தலைமை தாங்கி வழிநடத்தும் சூழல் ஏற்பட்டுள்ளது - திருமாவளவன்
எடப்பாடி பழனிசாமியை பக்கத்தில் உட்காரவைத்துக் கொண்டு கூட்டணி குறித்து அமித் ஷா பேசுகிறார். தமிழ்நாட்டில் அ.தி.மு.க கூட்டணியை பா.ஜ.க தலைமை தாங்கி வழிநடத்தும் சூழல் ஏற்பட்டுள்ளது என கும்பகோணத்தில் அம்பேத்கர் மற்றும் பெரியார் சிலைகளை திறந்து வைத்த வி.சி.க தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்
-
Apr 13, 2025 13:59 IST
நிர்வாகிகளை வரவேற்க பட்டாசு - விபத்து
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்ற நிலையில் தீப்பொறி பறந்து தீக்கிரையான சுமை தூக்கும் தொழிலாளர்களின் கொட்டகை
-
Apr 13, 2025 13:27 IST
மிக்சியில் பாய்ந்த மின்சாரம் - பெண் பலி
திருவாரூர் மாவட்டம் பின்னவாசலில், மிக்ஸியை இயக்கிய போது மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழப்பு. 8 மாத குழந்தைக்காக உணவு அரைத்த போது பலியானதால் சோகம்.
-
Apr 13, 2025 12:55 IST
ஒரே இரவில் 8 கடைகளின் பூட்டை உடைத்து கைவரிசை
புதுப்பாளையம், திருப்பாதிரிப்புலியூர் உள்ளிட்ட பகுதிகளில் நடந்த கொள்ளை. கடைகளில் இருந்த பணம், பொருட்களை அள்ளிச் சென்றுள்ளனர் கொள்ளையர்கள். கொள்ளை சம்பவத்தால் பொதுமக்கள், வியாபாரிகள் பீதி அடைந்துள்ளனர்.
-
Apr 13, 2025 12:52 IST
காளை முட்டி பார்வையாளர் பலி
புதுக்கோட்டை மீனம்பட்டி ஜல்லிக்கட்டில் காளை முட்டி பார்வையாளர் பலி காளை முட்டியதில் மாரிமுத்து என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
-
Apr 13, 2025 12:19 IST
இளம்பெண் தற்கொலை?-குடும்பத்தினர் போலீசில் புகார்
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அடுத்த கோகுலாபுரத்தில் திருமணமான ஏழு மாதத்தில் இளம்பெண் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இறந்த பெண்ணின் தலையில் வெட்டு காயம் இருப்பதால், மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர்.
-
Apr 13, 2025 12:15 IST
ரவுடி வரிச்சூர் செல்வத்தை சுட்டுப் பிடிக்க உத்தரவு
மதுரையைச் சேர்ந்த பிரபல ரவுடி வரிச்சூர் செல்வத்தை சுட்டுப் பிடிக்க உத்தரவு. கோவையில் கட்டப்பஞ்சாயத்திற்காக ஆயுதங்களுடன் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின்பேரில் காவலர்கள் சோதனை; தேவைப்பட்டால் காலில் சுட்டு பிடிக்க காவல் துறையினருக்கு உயரதிகாரிகள் அறிவுறியுள்ளனர்.
-
Apr 13, 2025 12:09 IST
ஜான் ஜெபராஜுக்கு ஏப்.25 வரை காவல்
போக்சோ வழக்கில் கைதான மத போதகர் ஜான் ஜெபராஜுக்கு ஏப்.25 வரை நீதிமன்றக் காவல் என்று உத்தரவு. கேரள மாநிலம் மூணாறில் கைதான ஜான் ஜெபராஜை ரப்.25 வரை காவலில் வைக்க கோவை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
Apr 13, 2025 11:14 IST
கண்ணாடி பாலத்திற்கு செல்ல தடை
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்திற்கு பொதுமக்கள் செல்ல ஏப்ரல் 15 - 19 வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே, கன்னியாகுமரிக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் தங்கள் பயண திட்டத்தை மாற்றி அமைத்துக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் அழகு மீனா அறிவித்துள்ளார்.
-
Apr 13, 2025 10:21 IST
மதுரை சித்திரை திருவிழா - வெளிநாட்டினருக்கு அழைப்பு
மதுரை சித்திரைத் திருவிழாவை காண வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, விருப்பம் உள்ள வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மதுரை மாவட்ட சுற்றுலா அலுவலகத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
Apr 13, 2025 09:37 IST
ரயில் பயணிகளுக்கான உடனடி மருத்துவ உதவி - கருவியை உருவாக்கிய மாணவிகள்
ரயில் பயணிகளுக்கான உடனடி மருத்துவ உதவி வழங்கும் மெடிக்கல் எக்ஸ்பிரஸ் என்ற கருவியை கண்டுபிடித்து அசத்திய அருப்புக்கோட்டை தேவாங்கர் மகளிர் மேல்நிலைப் பள்ளியின் 9ம் வகுப்பு மாணவிகள் T. திவ்யதர்ஷனா, R.சுபாஷினி இண்டஸ்இண்ட் வங்கியின் சமூக பொறுப்பு நிதியின் மூலம் பயிற்சி பெற்று இக்கருவியை உருவாக்கியுள்ளனர்!.
-
Apr 13, 2025 09:36 IST
திருவண்ணாமலை அருகே விபத்து
திருவண்ணாமலை அருகே நேற்று இரவு காரும் அரசுப் பேருந்தும் நேருக்கு நேர் மோதியதில் 4 பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். சோமாசிபாடி அடுத்த காட்டுக்குளம் பகுதி அருகே நள்ளிரவு 03:30 மணிக்கு இவ்விபத்து ஏற்பட்டுள்ளது. கீழ்பெண்ணாத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, உடல்களை பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
-
Apr 13, 2025 09:35 IST
கஞ்சா கடத்திய இளைஞர் கைது
ஒடிஸா மாநிலம் ராய்க்கடாவில் இருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு கடத்தி வரப்பட்ட 15 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடத்தலில் ஈடுபட்ட திருச்சி ராம்ஜி நகரை சேர்ந்த சரண்ராஜ் என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் மீது ஏற்கனவே கஞ்சா வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளன.
-
Apr 13, 2025 09:34 IST
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்திற்கு செல்ல 5 நாட்கள் தடை!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்திற்கு பொதுமக்கள் செல்ல வரும் 15 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரை அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பாலம் கட்டுமானத்தின் பராமரிப்பு பணியை ஆய்வு செய்ய உள்ளதால் 5 நாட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
Apr 13, 2025 09:33 IST
மத போதகர் ஜான் ஜெபராஜ் கைது!
கோவையில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் தேடப்பட்டு வந்த மதபோதகர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.