Coimbatore, Madurai, Trichy News Updates: விருதுநகர் கோயில் திருவிழாவில் மின்சாரம் தாக்கி 3 பேர் உயிரிழப்பு

கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட அனைத்து மாவட்ட செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட அனைத்து மாவட்ட செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Temple fest issue

தமிழ் புத்தாண்டு - திருச்செந்தூரில் குவியும் பக்தர்கள்

Advertisment

தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு, திருச்செந்தூரில், முருகனை வழிபட பக்தாகள் கூட்டம் குவிந்துள்ளது. பக்தர்கள் கடல், நாழி கிணற்றில் புனித நீராடி நீண்டவரிசையில் காத்திருந்து வழிபாடு செய்து வருகின்றனர்.

மேட்டூர் அணையின் நீர்மட்டம்

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து இன்று காலை நிலவரப்படி விநாடிக்கு 424 கன அடியாக அதிகரித்துள்ளது, அணையின் நீர் மட்டம் 107.53 அடியாகவும், நீர் இருப்பு 74.945 டி.எம்.சி. ஆகவும் உள்ளது. குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

  • Apr 14, 2025 17:09 IST

    மின்சாரம் தாக்கி 3 பேர் உயிரிழப்பு

    விருதுநகர், காரிசேரி மாரியம்மன் கோயில் திருவிழாவில் மின்சாரம் தாக்கியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர். மேலும், அவர்களை காப்பாற்ற முயன்ற இருவர் காயமடைந்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



  • Apr 14, 2025 16:36 IST

    சிறுமி உயிரைக் காப்பாற்றிய அரசு மருத்துவர்

    திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அருகே 5 ரூபாய் நாணயத்தை விழுங்கிய சிறுமியின் உயிரைக் காப்பாற்றிய அரசு மருத்துவருக்கு பலரும் தங்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். முதலில் சிறுமியை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், அவரை காப்பாற்ற முடியாது என்று கூறியதால் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இந்நிலையில், விடுமுறையில் இருந்த அரசு மருத்துவர் தீபானந்தன், பணிக்கு வந்து சிறுமியின் உயிரைக் காப்பாற்றினார்.



  • Advertisment
    Advertisements
  • Apr 14, 2025 15:46 IST

    கிரிக்கெட் மட்டையால் இளைஞர் அடித்துக் கொலை

    கோவை மாவட்டம், சூலூரில் கிரிக்கெட் மட்டையால் சிக்கந்தர் இளைஞரை அடித்து கொலை செய்த அவரது நண்பர் மணிகண்டன், சடலத்தை 100 மீட்டர் இழுத்துச் சென்று வீசியுள்ளார்.  உடலைக் கைப்பற்றிய போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



  • Apr 14, 2025 15:44 IST

    பள்ளியில் மாணவியை கடித்து குதறிய வெறிநாய்

    பெரம்பலூர் மாவட்டம் பேரளி கிராமத்தில் உள்ள உண்டு உறைவிட பள்ளியில் நாய் கடித்ததில் மாணவிக்கு முகம் முழுவதும் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நாய்களை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.



  • Apr 14, 2025 14:46 IST

    வருத்தம் இருந்தாலும் கட்சியை காப்பற்ற வேண்டும்: பா.ஜ.க கூட்டணி குறித்து முன்னாள் எம்.எல்ஏ ஆதங்கம்

    பா.ஜ.கவுடன் அதிமுக கூட்டணி வைத்தது வருத்தம் அளித்தாலும், கட்சியை காப்பாற்ற வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. இதற்கு முன்பு பா.ஜ.க கூட்டணி வைத்தபோது, அதிமுகவுக்கு வேலை பார்க்க முடியாது என்று இஸ்லாமிய சகோதரர்கள் சொன்னார்கள் என்று, திருப்பூரில் பொள்ளாச்சி ஜெயராமன், முன்னிலையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில், அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ குணசேகரன் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். 



  • Apr 14, 2025 14:16 IST

    தமிழ் புத்தாண்டு: கோவை முத்துமாரியம்மன் 4 கோடி ரூபாய் நோட்டில் அலங்காரம்

    கோவை: சித்திரை முதல் நாளை ஒட்டி, காட்டூர் அம்பால் முத்துமாரியம்மன் கோயிலில் ரூ.4 கோடி மதிப்பிலான ரூபாய் நோட்டுகள் மற்றும் தங்க நகைகளை வைத்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.



  • Apr 14, 2025 13:40 IST

    பண்டிகை கொண்டாட்டம் - சிறப்பு வழிபாடு

    சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில், தமிழ் புத்தாண்டு மற்றும் விசு பண்டிகைக்காக சிறப்பு வழிபாடு குவிந்த மக்கள்



  • Apr 14, 2025 12:35 IST

    அம்பேத்கர் பிறந்தநாள் விழாவில் தள்ளுமுள்ளு

    சனாதனம் குறித்து பேசிய அமைப்புகளால் கொந்தளித்த பாஜகவினர். பாஜகவினர் செருப்பு வீசியதால் பதற்றமான சூழல். பாஜகவினர் இடையே போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். 



  • Apr 14, 2025 12:25 IST

    மதுபாட்டில்கள் கடத்த பிரத்யேக ஆடை

    புதுச்சேரியில் இருந்து செஞ்சிக்கு மது பாட்டில்கள் கடத்திய 2 பெண்களை திண்டிவனம் போலீசார் கைது செய்தனர். 230 மதுபாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர் போலீசார்



  • Apr 14, 2025 12:23 IST

    அம்பேத்கர் சிலைக்கு எடப்பாடி பழனிசாமி மரியாதை

    அம்பேத்கரின் 135வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சேலத்தில் உள்ள அவரது சிலைக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மரியாதை செகுத்தினார். 



  • Apr 14, 2025 11:44 IST

    திற்பரப்பு அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

    தொடர் விடுமுறையை முன்னிட்டு திற்பரப்பு அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள், ஆர்ப்பரித்துக் கொட்டும் அருவியில்
    உற்சாக குளியல் போட்டு உற்சாகமடைந்தனர்.



  • Apr 14, 2025 11:37 IST

    வனப்பகுதியில் எரிந்த நிலையில் பெண் சடலம் மீட்பு

    திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி அருகே வனப்பகுதியில் எரிந்த நிலையில் பெண் சடலம் மீட்கப்பட்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். அமைதிசோலை என்ற இடத்தின்  அருகே 60 அடி பள்ளத்தில் ஆதிமூலம் நீரோடை அருகே பெண்ணின் சடலம் எரிந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. கால்நடை மேய்ச்சலுக்கு  சென்றவர்கள் கன்னிவாடி காவல் துறையினருக்கு தகவல் அளித்த நிலையில் விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த பெண் யார்? கொலை செய்யப்பட்டாரா? தற்கொலை முயற்சியா? என்பது போலீஸ் விசாரணைக்கு பின் தெரியவரும்.



  • Apr 14, 2025 11:04 IST

    இளைஞர் படுகொலை - உறவினர்கள் சாலை மறியல்

    சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் சரத் என்ற இளைஞர் படுகொலை செய்யப்பட்ட நிலையில் அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். அவர்களிடம் சிவகங்கை எஸ்.பி. பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.



  • Apr 14, 2025 10:54 IST

    தமிழ்ப் புத்தாண்டு - மீனாட்சியம்மன் கோயிலில் தரிசனம்

    உலக புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயிலில், தமிழ்ப் புத்தாண்டையொட்டி ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.



  • Apr 14, 2025 10:25 IST

    அரசுப் பேருந்து-காா் மோதல்: 4 போ் உயிரிழப்பு

    திருவண்ணாமலை அருகே ஞாயிறு அதிகாலை அரசுப் பேருந்தும் காரும் நேருக்கு நோ் மோதி விபத்துக்குள்ளானதில், புதுச்சேரியைச் சோ்ந்த லாரி உரிமையாளா்கள் 4 போ் உயிரிழந்தனா். விபத்து குறித்து கீழ்பென்னாத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

     

     



  • Apr 14, 2025 09:38 IST

    சித்திரை முதல் நாள் - கோயிலில் விஷு கனி தரிசனம்

    சித்திரை முதல் நாளை ஒட்டி ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள ஐயப்பன் கோயிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள் விஷூ கனி தரிசனத்திற்காக ஏராளமான பழங்கள் மற்றும் காய்கறிகளை கொண்டு ஐயப்பனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.



  • Apr 14, 2025 09:37 IST

    முயல் வேட்டை - மூவர் கைது

     திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே மாரம்பாடி வனப்பகுதியில் காட்டு முயல் வேட்டையில் ஈடுபட்ட 3 பேரை வனத்துறையினர் கைது செய்தனர். 3 பேருக்கும் தலா ரூ.25,000 அபராதம் விதிப்பு, ஏர்கன் துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட்டது.



  • Apr 14, 2025 09:36 IST

    மேட்டுர் அணை நீர் நிலவரம்

    மேட்டூர் அணைக்கு நீர் வரத்து இன்று காலை நிலவரப்படி விநாடிக்கு 424 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர் மட்டம் 107.53 அடியாகவும், நீர் இருப்பு 74.945 டி.எம்.சி. ஆகவும் உள்ளது குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.



Tamilnadu Live News Udpate

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: