Advertisment

Coimbatore, Madurai, Trichy News Live: விழுப்புரம் அருகே சங்க கால தொல்பொருள் எச்சங்கள் கண்டுபிடிப்பு

Coimbatore, Madurai, Trichy News Live Updates: கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட அனைத்து மாவட்ட செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணைய பக்கத்துடன் இணைந்திருங்கள்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Villupuram

தஞ்சை மாநகராட்சி பேருந்து நிலைத்த்தில், பொதுமக்கள் சிறுநீர் கழிப்பதை தடுக்கும் வகையில், மாநகராட்சி சார்பில், புதிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பேருநது நிலையத்தை சுற்றி உள்ள தடுப்புகளில், சிறுநீர் கழித்தால், இதில் இருந்து அலாரம் அடிக்கும் வகையில், அமைக்கப்பட்டுள்ளது. இதனால் பேருந்து நிலைத்தின் தடுப்புகளில் சிறுநீர் கழிப்பதை தடுக்க முடியும்.

  • Jan 07, 2025 21:57 IST

    சங்க கால தொல்பொருள் எச்சங்கள் கண்டுபிடிப்பு

    விழுப்புரம் அருகே பம்பை ஆற்றின் கரையோரமுள்ள அகரம், தென்னமாதேவி பகுதிகளில் சங்க கால தொல்பொருள் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன



  • Jan 07, 2025 20:55 IST

    ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் – 3 நாட்கள் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்பு

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்படுகிறது. வரும் 10ம் தேதி முதல் 17ம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம். அரசு விடுமுறை தவிர மற்ற நாட்களில் காலை 11மணி முதல் 3மணி வரை வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும். அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் விளம்பரம் செய்வதற்கு முன்பு முன் தணிக்கை சான்று பெற வேண்டும். அரசு விடுமுறை நாட்களில் வேட்புமனு தாக்கல் செய்ய முடியாது. வரும் 10, 13, 17 ஆகிய 3 நாட்களில் மட்டுமே வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்யும் சூழல் உள்ளது என மாவட்ட தேர்தல் அலுவலர் தெரிவித்துள்ளார்



  • Advertisment
  • Jan 07, 2025 20:00 IST

    மதுரை ஜல்லிகட்டு பதிவு நிறைவு

    மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க 12,632 காளைகளும், 5347 காளையர்களும் பதிவு செய்துள்ளனர்



  • Jan 07, 2025 19:28 IST

    பாலியல் தொல்லை; தொடக்கப் பள்ளி ஆசிரியர் கைது

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே 11ம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு பாலியல் தொல்லை அளித்த தொடக்கப் பள்ளி ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். தொடக்கப் பள்ளியில் அரையாண்டு விடுமுறையின் போது விளையாட வந்த தங்களுக்கு, தலைமை ஆசிரியர் ராஜேஷ் பாலியல் தொல்லை அளித்ததாக மாணவர்கள் புகார் அளித்தனர். புகாரை விசாரித்த குழந்தைகள் நல பாலியல் தடுப்பு பிரிவு குற்றச்சாட்டு உறுதியானதால் போலீசார் விசாரித்து நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்ததை அடுத்து போக்சோவில் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது



  • Advertisment
    Advertisement
  • Jan 07, 2025 17:59 IST

    டங்ஸ்டன் எதிர்ப்பு போராட்டம்; ஸ்தம்பித்தது மதுரை தமுக்கம் மைதானம்

    மதுரை தல்லாகுளம் பகுதியில் அமைந்துள்ள தலைமை அஞ்சல் அலுவலகத்தை முற்றுகையிட்டு டங்ஸ்டன் எதிர்ப்பு போராட்டக்காரர்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை மாவட்டம், மேலூர் வட்டத்தில் உள்ள நாயக்கர்பட்டி தொகுதி டங்ஸ்டன் சுரங்க ஏல அறிவிப்பை எதிர்த்து, கடந்த நவம்பர் மாதம் முதல் மேலுரை சுற்றியுள்ள பல்வேறு கிராமப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக, பெரியாறு பாசன விவசாயிகள் சங்கம் மற்றும் மேலூர் வணிகர் சங்கங்கள் ஆகியவற்றின் துணையோடு டங்ஸ்டன் சுரங்க எதிர்ப்பு கூட்டமைப்பு, அரிட்டாபட்டி, நரசிங்கம்பட்டி, தெற்குத் தெரு, வல்லாளப்பட்டி, கிடாரிப்பட்டி, கம்பூர், கேசம்பட்டி, சின்ன கற்பூரம்பட்டி உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த பொது மக்கள் இன்று மதுரை தல்லாகுளம் தலைமை அஞ்சல் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை அறிவித்திருந்தனர். டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, மதுரை தலைமை அஞ்சல் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டகாரர்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.



  • Jan 07, 2025 17:52 IST

    டங்க்ஸ்டன் சுரங்க திட்டத்திற்கு எதிர்ப்பு; விசாயிகள் போராட்டத்தால் ஸ்தம்பித்தது மதுரை

    துரை டங்க்ஸ்டன் சுரங்க திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகளும் பொது மக்களும் பெருந்திரளாக மாபெரும் பேரணி நடத்தினர். முல்லை பெரியாறு ஒருபோக பாசன விவசாயிகள் சங்கம் அனுமதியை மீறி தலைமை தபால் நிலையத்தை நோக்கி பேரணியில் ஈடுபட்டனர்.



  • Jan 07, 2025 17:48 IST

    திருச்சி மாநகராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு; திருச்சி திண்டுக்கல் சாலையில் கே.கள்ளிக்குடி மக்கள் சாலை மறியல் 

    திருச்சி மாநகராட்சியுடன் ஊராட்சியை இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருச்சி திண்டுக்கல் சாலையில் கே.கள்ளிக்குடி கிராமத்தை சேர்ந்த கிராம பொதுமக்கள் திடீர் சாலை மறியல் போராட்டம்;  அரசு அதிகாரிகள், காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.



  • Jan 07, 2025 16:21 IST

    மதுரையில் தடுப்புகளை தகர்த்து விவசாயிகள் போராட்டம் 

    மதுரை தமுக்கம் மைதான சாலையில் 5000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் சாலையில் அமர்ந்து தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். போலீசாரின் தடுப்புகளை தாண்டி முன்னேறி வரும் மக்கள், தடுப்புகளை தகர்த்து போராட்ட களத்திற்கு விவசாயிகள் வந்துள்ளனர்.



  • Jan 07, 2025 16:19 IST

    ஈரோடு இடைத்தேர்தல்: பாஜக போட்டியிட உள்ளதாக தகவல்! 

    பிப்ரவரி 5ம் தேதி நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பாஜக போட்டியிட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  பாஜக தேசியப் பொதுச்செயலாளர் தருண் சுக் தலைமையில் நாளை பாஜக மையக் குழுக் கூட்டம் நடைபெற உள்ளது.



  • Jan 07, 2025 16:18 IST

    ஈரோடு இடைத்தேர்தல்: தவெக போட்டியில்லை

    தமிழக வெற்றிக் கழகத்திற்கு 2026 சட்டமன்ற தேர்தல் தான் இலக்கு; ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தவெக போட்டியிடவில்லை என கட்சித் தலைமை அறிவித்துள்ளது.



  • Jan 07, 2025 15:25 IST

    ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் நடத்தை விதிகள் அமல்

    சட்டப்பேரவை தேர்தல் நடக்கும் டெல்லி யூனியன் பிரதேசம் மற்றும் இடைத்தேர்தல் நடக்கும் மில்கிபூர், ஈரோடு கிழக்கு தொகுதிகளில் தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. இதன் காரணமாக ஈரோடு கிழக்கு தொகுதியில், மாநராட்சி அலுவலகத்தில் மேயர், துணை மேயர் அறைகள் மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டன. அரசியல் தலைவர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட கல்வெட்டு மறைக்கப்பட்டன.



  • Jan 07, 2025 15:10 IST

    ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் - பிப்.-8ல் வாக்கு எண்ணிக்கை 

    ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி.5ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுவதாக தலைமை தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் பதிவான வாக்குகள் பிப்ரவரி .8ஆம் தேதி எண்ணப்படுகின்றன.ஈரோடு கிழக்கு தொகுதி காங். எம்.எல்.ஏ. ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மறைவை அடுத்து இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது.



  • Jan 07, 2025 15:04 IST

    ஈரோடு இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு

    இ.வி.கே.எஸ் இளங்கோவன் மறைவை தொடர்ந்து பிப்ரவரி 5ம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.



  • Jan 07, 2025 14:35 IST

    இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு ரூ.5 லட்சம் அபராதம்: நாமக்கல் நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு

    கல்விக் கடனை செலுத்திய பிறகும் ஏஜென்சி மூலம் மிரட்டல் விடுத்த புகாரில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதித்து நாமக்கல் நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.



  • Jan 07, 2025 14:00 IST

    டங்ஸ்டனுக்கு எதிர்ப்பு - மதுரை நோக்கி பேரணி.

    டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு எதிராக நரசிங்கம்பட்டி முதல் மதுரை வரை பேரணி பொதுமக்கள் பேரணி  மேற்கொண்ட நிலையில், மக்களை போலீசார் தடுத்து நிறுத்தி வருகிறார்கள். வாகன பேரணிக்கு அனுமதி பெற்று மக்கள் நடைபயணமாக சென்று வருகிறார்கள். 

    டங்ஸ்டன் சுரங்க அனுமதியை மத்திய அரசு ரத்து செய்யக் கோரிக்கை நடைபயணத்தை கைவிட்டு வாகன பேரணி செல்லுங்கள் என்று  காவல்துறை கூறியுள்ளது. 



  • Jan 07, 2025 13:55 IST

    வேளாண் மண்டலங்களாக அறிவிக்க அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை

    டங்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மேலூரில் இருந்து பேரணியாக சென்று தல்லாகுளம் தபால் நிலையம் அருகே கண்டன போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். அப்போது, "48 கிராமங்களையும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களாக அறிவிக்க வேண்டும்" என்று அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 



  • Jan 07, 2025 12:46 IST

    இ.பி.எஸ் உறவினருக்கு சொந்தமான கட்டுமான நிறுவனத்தில் ரெய்டு

    ஈரோட்டில் எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய உறவினர் ராமலிங்கத்திற்கு சொந்தமான கட்டுமான நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை எனத் தகவல் கூறப்படுகிறது. 



  • Jan 07, 2025 12:03 IST

    தல்லாகுளத்தில் மக்கள் பேரணி - மதுரை - திருச்சி சாலையில் போக்குவரத்து நிறுத்தம்

    டங்ஸ்டன் கனிம சுரங்க ஒப்பந்தத்தை மத்திய அரசு முழுமையாக ரத்து செய்யக் கோரி, மதுரை தல்லாகுளம் பகுதியில் பேரணியாக சென்ற கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் மதுரை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.



  • Jan 07, 2025 10:17 IST

    மேலூரில் கடையடைப்பு போராட்டம்

    டங்ஸ்டன் கனிம சுரங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மேலூரில் கடையடைப்பு போராட்டம் இன்று நடைபெறுகிறது. திரையரங்கம், மருந்தகம், உணவகம் உள்ளிட்ட அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளது. தலைமை தபால் அலுவலகத்திற்கு வாகனம் மூலம் பேரணியாக செல்லவும் திட்டமிடப்பட்டுள்ளது.



  • Jan 07, 2025 09:45 IST

    கிருஷ்ணகிரியில் பனிமூட்டம்

    கிருஷ்ணகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிகாலை முதலே பனிமூட்டம் காணப்படுகிறது.



  • Jan 07, 2025 09:44 IST

    ஓடையில் இறந்து கிடந்த நிறைமாத கர்ப்பிணி

    ராமநாதபுரத்தில் ஓடையில் இறந்து கிடந்த நிறைமாத கர்ப்பிணி பெண்ணின் சடலத்தை மீட்டு  போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



Coimbatore Trichy Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment