Advertisment

Coimbatore, Madurai, Trichy News Updates: திருப்பதியில் கூட்ட நெரிசல்- சேலம் பெண் உயிரிழப்பு

Coimbatore, Madurai, Trichy News Live Updates: கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட அனைத்து மாவட்ட செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணைய பக்கத்துடன் இணைந்திருங்கள்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tirupati issue

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, மதுரையில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிக்கு முன்பதிவு நேற்றுடன் முடிந்த நிலையில், அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க, 12,632 காளைகளும், 5,437 மாடுபிடி வீரர்களும் பங்கேற்க முன்பதிவு செய்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது,

  • Jan 08, 2025 21:56 IST
    திருப்பதியில் கூட்ட நெரிசல்- சேலம் பெண் உயிரிழப்பு

    திருப்பதியில், இலவச தரிசன டோக்கன் வாங்க குவிந்த கூட்டத்தில் சிக்கி, சேலத்தைச் சேர்ந்த மல்லிகா என்ற பெண் உயிரிழந்தார். மேலும், 4 பேர் காயமடைந்தனர். வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் பிரவேசத்திற்கு இலவச தரிசன டோக்கன் வாங்குவதற்காக ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.



  • Jan 08, 2025 20:32 IST
    முதியவர் மீது தாக்குதல்

    திருச்சி, ஸ்ரீரங்கத்தில் 75 வயது முதியவர் மீது தாக்குதல் நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சரிக்கு சரியாக வேட்டி கட்டியதால், சாதியைக் குறிப்பிட்டு இருவர் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.



  • Advertisment
  • Jan 08, 2025 19:38 IST
    ஜாமின் மனுக்கள் தள்ளுபடி

    விழுப்புரம் மாவட்டத்தில், பள்ளி கழிவுநீர் தொட்டியில் விழுந்து சிறுமி உயிரிழந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 3 பேரின் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மூவரின் ஜாமின் மனுக்களையும் விழுப்புரம் முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.



  • Jan 08, 2025 19:02 IST
    பெரியார் பல்கலை. துணைவேந்தருக்கு தொழிலாளர் சங்கம் கண்டனம்

    துணை வேந்தரின் செயலை கண்டித்தும், பதிவாளர் தங்கவேல் மீது நடவடிக்கை கோரியும் பல்கலைக்கழக தொழிலாளர் சங்கத்தினர் 3 மாதத்திற்கு முன்பு பல்கலைக்கழக நுழைவாயிலில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்பாட்டத்தில் பங்கேற்ற தொழிலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் போக்கில் விசாரணை குழு ஒன்றை அமைத்துள்ள துணை வேந்தர் ஜெகநாதன் வரும் 23 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக நோட்டீஸும் அனுப்பியுள்ளார். துணை வேந்தரின் ஜனநாயக விரோத செயலை கண்டித்துள்ள தொழிலாளர்கள் சங்கத்தினர், இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.



  • Advertisment
    Advertisement
  • Jan 08, 2025 17:46 IST
    சிவகிரி காவல் நிலைய ஆய்வாளர் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம்

    தென்காசி மாவட்டம் சிவகிரி காவல் நிலைய ஆய்வாளர் சண்முக லட்சுமி காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம் செய்துள்ளனர். ஆய்வாளர் சண்முக லட்சுமி மீது புகார் கூறி காவலர் சைலேஷ் வீடியோ வெளியிட்ட நிலையில் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.



  • Jan 08, 2025 17:27 IST
    30 நிமிடத்தில் சிக்கிய கொலையாளி

    சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கருப்பையா என்ற முதியவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், கொலையாளியை வெறும் 30 நிமிடத்தில் போலீசார் கைது செய்துள்ளனர். 



  • Jan 08, 2025 17:12 IST
    வேடசந்தூர் அருகே தனியார் எண்ணெய் ஆலையில் பயங்கர தீ விபத்து

    எண்ணெய் ஆலையில் பயங்கர தீ விபத்து திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே தனியாருக்கு சொந்தமான எண்ணெய் ஆலையில் பயங்கர தீ விபத்து மூனாண்டிபட்டியில் உள்ள ஆலையில் எண்ணெய் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது.



  • Jan 08, 2025 17:04 IST
    எண்ணெய் ஆலையில் பயங்கர தீ விபத்து

    திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே தனியாருக்கு சொந்தமான எண்ணெய் ஆலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மூனாண்டிபட்டியில் உள்ள ஆலையில் எண்ணெய் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது



  • Jan 08, 2025 17:03 IST
    கோவையில் இளைஞர் வெட்டிக் கொலை 

    கோவையில் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் இளைஞரை  3 பேர் கொண்ட கும்பல் வெட்டிக் கொன்றுள்ளனர். இளைஞர் இன்பரசன் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார் 



  • Jan 08, 2025 16:14 IST
     தெற்கு மாவட்டச் செயலாளர் சுப்பையா பாண்டியன் விலகல்

    நாம் தமிழர் கட்சியில் இருந்து தூத்துக்குடி தெற்கு மாவட்டச் செயலாளர் சுப்பையா பாண்டியன் தனது ஆதரவாளர்களுடன் கட்சியில் இருந்து விலகியுள்ளார். மேலும்,  “நாங்கள் விலகுவதற்கு முக்கிய காரணமே சாடை துரைமுருகன் மட்டும்தான்; சீமான் படிப்பாளி. மிகப் பெரிய அறிவாளி, ஆனால், மோசமான் நிர்வாகி” என்று சுப்பையா பாண்டியன் விமர்சனம் வைத்துள்ளார்.



  • Jan 08, 2025 13:58 IST
    பொங்கல் பண்டிகையையொட்டி தூத்துக்குடிக்கு சிறப்பு ரயில் இயக்கம்

    பொங்கல் பண்டிகையையொட்டி சொந்த ஊர் செல்ல வசதியாக கூடுதலாக 2 சிறப்பு ரயில்களை அறிவித்துள்ள தெற்கு ரயில்வே 10ஆம் தேதி மைசூரில் இருந்து சேலம், திண்டுக்கல் வழியாக தூத்துக்குடிக்கும், மறு மார்க்கத்தில் 11ஆம் தேதி மைசூருக்கும் இயக்கப்படும். 10ஆம் தேதி பெங்களூருவில் இருந்து காட்பாடி வழியாக சென்னை சென்ட்ரலுக்கும், மறு மார்க்கத்தில் அதே நாளில் பெங்களூருவுக்கும் சிறப்பு ரயில்  இயக்கப்படும.ஏற்கனவே 5 சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 2 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது.



  • Jan 08, 2025 11:28 IST
    ஈரோட்டில் வாகன சோதனைகளில் பறக்கும் படையினர்

    ஈரோட்டில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததை அடுத்து பறக்கும் படையினர் வாகன சோதனைகளில் ஈடுபட்டுள்ளனர்



  • Jan 08, 2025 10:56 IST
    ஈரோடு கிழக்கில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை திறப்பு!

    ஈரோடு கிழக்கில் தொகுதியில் பிப்ரவரி 5 ஆம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மாநகராட்சி அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. பறக்கும் படை, கண்காணிப்பு அலுவலர்கள் உள்ளிட்டோர் கட்டுப்பாட்டு அறையில் பணியில் இருப்பர். 



  • Jan 08, 2025 10:47 IST
    சாலையில் அணிவகுத்த வாகனங்கள்

    ஐயப்ப பக்தர்கள் அதிகளவில் வருவதால் தமிழக - கேரள எல்லையில் கடும் போக்குவரத்து நெரிசல்; புளியரை சோதனை சாவடியில் அணிவகுத்து வாகனங்கள் நின்றன.



  • Jan 08, 2025 10:42 IST
    மதுரையில் பாஜகவினர் ஒட்டியுள்ள போஸ்டர்!

    மீண்டும் தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டுள்ளார் என மதுரையில் போஸ்டர்களை பாஜகவினர் ஒட்டியுள்ளனர். 



  • Jan 08, 2025 10:41 IST
    ரூ.3 கோடிக்கு விற்பனையான ஆடுகள்!

    கிருஷ்ணகிரியில் ஒரப்பம் வாரச்சந்தையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரூ.3 கோடிக்கு ஆடுகள் விற்பனையாகின.



  • Jan 08, 2025 10:11 IST
    4 லட்சம் பேருக்கு உரிமைத்தொகை

    திண்டுக்கல் மாவட்டத்தில் 5.27 லட்சம் பேர் மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பித்த நிலையில் 4 லட்சம் பேர் உரிமைத்தொகை பெறுகின்றனர் என துணை முதலமைச்சர் உதயநிதி சட்டப்பேரவையில் கூறினார்.



  • Jan 08, 2025 09:47 IST
    யார் அந்த நா.த.க வேட்பாளர்?

    ஈரோடு கிழக்கு தொகுதிக்கான நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் பெயர் வரும் 12ம் தேதி அறிவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மறைவை அடுத்து அடுத்த மாதம் 5ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.



  • Jan 08, 2025 09:45 IST
    ஈரோட்டில் விரிவடையும் ஐடி சோதனை

    ஈரோட்டில் எடப்பாடி பழனிசாமியின் அக்கா மகன் வெற்றிவேல் முதன்மை இயக்குநராக உள்ள அலுவலகத்திலும் வருமான வரி சோதனை மேற்கொண்டுள்ளனர். 



  • Jan 08, 2025 09:44 IST
    டங்ஸ்டன் போராட்டம்: 5000 பேர் மீது வழக்கு

    டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரையில் நேற்று தடையை மீறி போராட்டம் நடத்திய 5000 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.மேலும்முக்கம் மைதானம் வரை தடையை மீறி 5000 பேர் பேரணியாக சென்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.



Coimbatore Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment