மருதமலை சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் குடமுழுக்கு முன்னிட்டு தனியார் நகைக்கடை உரிமையாளர் குடும்பத்தினரின் சார்பில் 7 லட்சம் மதிப்புள்ள தங்க முலாம் பூசப்பட்ட அபிஷேகக் குடம் உபயமாக வழங்கப்பட்டது.
முருகப்பெருமானின் ஏழாவது படை வீடு என கருதப்படும் மருதமலை முருகன் கோவில் குடமுழுக்கு விழா வரும் 4ம் தேதி நடைபெற உள்ள நிலையில் விழாவிற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்த விழாவிற்காக பக்தர்கள் தங்களுக்கு விருப்பமான முறையில் தொகையாகவோ, பொருளாகவோ, கோவிலுக்கு உபயமாக கொடுத்து வருகின்றனர்.
அந்த வகையில், இன்றைய தினம் கோவையில் ராஜவீதியில் உள்ள சுமங்கலி ஜூவல்லர்ஸ் ஏ.ஆர்.விஸ்வநாதன் மற்றும் குடும்பத்தினர் சார்பில் ஏழு லட்சம் மதிப்புள்ள தங்கம் முலாம் பூசப்பட்ட அபிஷேக குடம் கோவிலுக்கு உபயமாக வழங்கப்பட்டது. இதுகுறித்து உபயமாக வழங்கிய சுமங்கலி ஜூவல்லர்ஸ் உரிமையாளர் செந்தில்குமார் கூறுகையில்,
/indian-express-tamil/media/media_files/2025/04/02/murugan-maruthamala-597365.jpg)
இந்தக் குடத்தின் சிறப்பம்சமாக முன்புறம் முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் இருப்பது போலவும், பின்புறம் மருதமலை முருகன் நிற்பது போலவும் அருகில் இருபுறமும் மயில் நிற்பது போன்றவும் நகாசு வேலைபாடுடன் இருப்பதாகும், மேலும் இந்த அபிஷேக் குடமானது தைப்பூசம் சஷ்டி போன்ற முக்கிய விசேஷ காலங்களில் மூலவர் சன்னதியில் உள்ள முருகப்பெருமானுக்கு செய்யப்படும் அபிஷேகத்திற்கு முக்கியத்துவம் வகிக்கும் ,இந்த அற்புதமான பாக்கியத்தை தந்ததற்கு இந்த தருணத்தில் இறைவனுக்கு நன்றி தெரிவிக்கிறோம் என கூறினர்.