கோவையில் மிலாடிநபி கொண்டாட்டம்; உலக அமைதி, மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி சிறுவர், சிறுமிகள் பேரணி!

நபிகள் நாயகம் குறித்த வரலாறு,மற்றும் இஸ்லாம் சமயத்தின் சிறப்புகள் குறித்து இஸ்லாமிய அறிஞர்களின் சொற்பொழிவு நடைபெற்றது.

நபிகள் நாயகம் குறித்த வரலாறு,மற்றும் இஸ்லாம் சமயத்தின் சிறப்புகள் குறித்து இஸ்லாமிய அறிஞர்களின் சொற்பொழிவு நடைபெற்றது.

author-image
WebDesk
New Update
Miladi nadh

கோவை மதுக்கரை ஹிதாயத்துல் இஸ்லாம் சுன்னத் ஜமாத்  சார்பாக நடைபெற்ற மீலாது நபி தின விழா கொண்டாடப்பட்ட நிலையில்,உலக அமைதி, மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி சிறுவர்,சிறுமிகள் பேரணியாக சென்றனர்.

Advertisment

இஸ்லாமியர்களின் இறை துாதரான நபிகள் நாயகம் பிறந்த நாள் விழா மீலாது நபி விழாவாக அனைத்து இஸ்லாமிய மக்களாலும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை  மதுக்கரை பகுதியில் உள்ள  முஸ்லிம் காலனி,  ஹிதாயத்துல் இஸ்லாம், சுன்னத் ஜமாத் பள்ளிவாசல்,சார்பாக மீலாது நபி தின விழா கொண்டாடப்பட்டது.

முன்னதாக நபிகள் நாயகம் குறித்த வரலாறு,மற்றும் இஸ்லாம் சமயத்தின் சிறப்புகள் குறித்து இஸ்லாமிய அறிஞர்களின் சொற்பொழிவு நடைபெற்றது. இதனை தொடர்ந்து சிறுவர்,சிறுமிகளின் மீலாது நபி ஊர்வலம் நடைபெற்றது. உலக அமைதி,மத நல்லிணக்கம் மற்றும் சகோதரத்துவத்தை வலியுறுத்தும் விதமாக நடைபெற்ற பேரணியில் இஸ்லாமிய சிறுவர்,சிறுமிகள் ஊர்வலமாக சென்றனர்.

இதில் அந்த பகுதிகளில் வசிப்போர், பல்வேறு அமைப்பினர், தன்னார்வலர்கள், என பலர் சிறுவர்,சிறுமிகளுக்கு பிஸ்கட்டுகள் இனிப்புகள்,ஜூஸ் வகைகள் உள்ளிட்டவற்றை வழங்கினர். முஸ்லிம் காலனியில் துவங்கிய ஊர்வலம்   பாலக்காடு சாலை வழியாக ஐயப்பன் கோவில் வீதி மற்றும் விநாயகர் கோவில் வீதிகள் வரை சென்று, மீண்டும் முஸ்லிம் காலனியை வந்தடைந்தது.

Advertisment
Advertisements

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவை மதுக்கரை ஹிதாயத்துல்  இஸ்லாம் சுன்னத் ஜமாத் பள்ளிவாசல் நிர்வாகிகள் அன்வர் சாதாத் ஹஜ்ரத்,பாபு பாஷா, தஸ்லிம் உஸ்தாத்,சுபைர், ஷோயிப் அஹ்மத், அமீர் அப்பாஸ் உள்ளிட்ட பலர் செய்தருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பி.ரஹ்மான் கோவை மாவட்டம்

Tamilnadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: