/indian-express-tamil/media/media_files/RH9OcNMHjYl3dDLnaESC.jpg)
வானதி சீனிவாசன்
தேர்தல் செலவிற்காக பூத் ஏஜெண்ட்களுக்கு கொடுக்க வைத்திருந்த பணத்தை பிடித்து கொண்டு, பாஜகவினர் வாக்காளர்களுக்குபணம் கொடுத்ததாக பொய் செய்தி பரப்புகிறார்கள் என கோவையில் செய்தியாளர்களை சந்தித்த சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன்கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்கள் 39 தொகுதிகளிலும் வெற்றி வேட்பாளராக களத்தில் நின்று கொண்டிருக்கிறார்கள்.அத்தனை தரப்பு மக்களும் மோடி மீது நல்ல அபிப்பிராயம் கொண்டுள்ளனர்.நேர்மையான திறமையான ஆட்சியை மோடி தந்துள்ளார்.மக்களின் ஆதரவு எங்களது உற்சாகத்தை பல மடங்கு உயர்த்தியுள்ளது
பா.ஜ.க குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே ஆதரவு உள்ளது என்பதை இந்தத் தேர்தல் மாற்றி காட்டும்.கிராமம் மற்றும் நகரங்களில் ஒரே மாதிரியான ஆதரவு பா.ஜ.க.விற்கு கிடைக்கும்.அண்ணாமலைக்கு கிடைக்கும் ஆதரவு கோவையில் தாமரை மலரும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது அண்ணாமலை லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். கோவை பாஜகவிற்கு ஆதரவான தொகுதி.
இந்த பகுதி முழுக்க பாஜக கணிசமான வாக்கு வங்கியை கொண்டுள்ளது.இந்த தேர்தலில் பாஜக வாக்கு வங்கி பல மடங்கு அதிகரிக்கும். கோவையில் அண்ணாமலை வெற்றி பெறுவார். 400 எம்.பி.க்களில் இவரும் ஒருவராக இருப்பார்.தேர்தல் செலவிற்காக பூத் ஏஜெண்ட்களுக்கு கொடுக்க வைத்திருந்த பணத்தை பிடித்து கொண்டு, பாஜகவினர் வாக்காளர்களுக்குபணம் கொடுத்ததாக பொய் செய்தி பரப்புகிறார்கள்
பல்வேறு இடங்களில் தேர்தல் ஆணையம் உத்தரவுபடி அதிகாரிகள் நடக்கவில்லை. வெளிப்படையாக தி.மு.க அ.தி.மு.க பணம் கொடுக்கிறார்கள். அதுகுறித்து புகார் அளித்தாலும் நடவடிக்கை எடுக்கவில்லை. திமுக பணம் கொடுப்பது வெளியே வராமல் இருக்க , ஆட்களை செட் பண்ணி பா.ஜ.க பணம் கொடுத்தது போல திசை திருப்பி விடுகிறார்கள். கோடிக்கணக்கான பணத்தை கொட்டி கொடுத்தாலும் கோவையில் தாமரை மலரும்என வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.