கோவை சுண்டப்பாளையம் பகுதியில் உள்ள அரசு மேல் நிலை பள்ளி வளாகத்தில் தமிழக அரசின் நம்ம ஸ்கூல் நம்ம ஊர் பள்ளி திட்டத்தில் தனியார் பங்களிப்புடன் கட்டி முடிக்கப்பட்ட புதிய வகுப்பறைகள் துவங்கப்பட்டது.
கோவையில் தனியார் அமைப்பின் கல்வி களம் எனும் திட்டத்தில் கோவை சுண்டப்பாளையம் பகுதியில் உள்ள அரசு மேல் நிலை பள்ளி வளாகத்தில் இரண்டு புதிய வகுப்பறைகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளது. சுமார் 1122 சதுர அடியில் 24 இலட்சம் மதிப்பீட்டில் நம்ம ஸ்கூல் நம்ம ஊர் பள்ளி திட்டத்தில் கட்டி முடிக்கப்பட்டுள்ள இந்த வகுப்பறைகளின் திறப்பு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
இதனை தொடர்ந்து பேசிய தனியார் அமைப்பின் கவர்னர் சுந்தரவடிவேலு தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு மற்றும் மாநாகராட்சி பள்ளிகளை தரம் உயர்த்துவதில் ரோட்டரி அதிகம் கவனம் செலுத்துவதாகவும் அதே நேரத்தில் அரசும் அதற்குரிய வழமுறைகளை எளிதாக்கி உள்ளதால் இது போன்ற திட்டங்களை விரைவாக செயல்படுத்த முடிவதாகவும் கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய பரணிகுமார் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட இந்த வகுப்பறைகள் எதிர் காலத்தில் மேல் தளங்கள் அமைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
பி.ரஹ்மான். கோவை மாவட்டம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“