கோவையில் நொய்யல் திருவிழாவை ஒட்டி பேரூர் படித்துறையில் ஆரத்தி எடுத்தல் மற்றும் பல்வேறு தலைப்புகளில் கருத்தரங்கள் நடைபெற்று வருகின்றது. இதன் துவக்க விழா முன்னிட்டு தமிழ்நாட்டின் பாரம்பரிய நடனமான ஒயிலாட்டம் கும்மியாட்டம் மற்றும் பாரம்பரிய நடனங்கள் அரங்கேற்றம் நடைபெற்றது.
Advertisment
பார்வையாளர்களை மிகுந்த கவனத்தில் ஈர்த்ததில் கொங்கு மண்டலத்தில் மிகச் சிறப்பான நடனமாக கருதப்படும் பெருசலங்கை நடனம் முருக கடவுளின் காவடி சிந்து பாடலுக்கு பெண்கள் அணிவகுத்து ஆடியது அனைவரும் கவர்ந்தது.
மேலும் நொய்யல் திருவிழா முடியும் வரை பல்வேறு கலை நிகழ்ச்சியில் நடைபெறவிருப்பதாகவும் பல்வேறு தலைப்புகளில் முக்கியஸ்தர்கள் வந்து உரையாற்றுவார்கள் அதன் மூலமாக நொய்யலை மீட்டெடுக்க நிகழ்ச்சிகளை நடத்தப்படுவதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் நல்லறம் அமைப்பு தலைவர் அன்பரசன்,தலைமை ஒருங்கிணைப்பாளர் சுரேஷ்குமார்,மாதம்பட்டி தங்கவேலு,ரோட்டரி மணிகண்டன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
பி.ரஹ்மான். கோவை மாவட்டம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil