/indian-express-tamil/media/media_files/2025/06/06/cBSEvQIsH3meBbPLGXxN.jpg)
மேட்டுப்பாளையம் அருகே ஆம்னி வேனின் மீது மோதி இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் தூக்கி வீசப்பட்ட சிசிடிவி காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சத்யசாய் நகர் பகுதியயை சேர்ந்தவர் ஹரிஷ் மற்றும் அவரது நண்பர் சஞ்சித் நண்பர்களான இருவரும் நேற்று மாலை மேட்டுப்பாளையத்தில் இருந்து அன்னூர் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது ஜடையம்பாளையம் அருகே வந்தபோது சாலையின் ஒருபுறம் இருந்து மற்றொரு புறம் ஆம்னி வேன் சாலையை கடந்து போது எதிர்பாராத விதமாக இரு சக்கர வாகனத்தில் வந்த இருவரும் ஆம்னி வேன் மீது மோதியது ஏற்பட்டது இதில் பின்னால் அமர்ந்திருந்த ஹரிஷ் தூக்கி வீசப்பட்டார்.
ஆம்னி வேன் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து; 2 இளைஞர்கள் படுகாயம்: வைரல் வீடியோ! pic.twitter.com/gBOXzxK8cm
— Indian Express Tamil (@IeTamil) June 6, 2025
படுகாயமடைந்த இருசக்கர வாகனத்தில் வந்த இருவரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்த சிறுமுகை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான விபத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.