பெரியார் குறித்து அவதூறு பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை கண்டித்து அன்னூரில் அவரது உருவப் படத்திற்கு செருப்பு மாலை அணிவித்தும் சாணியை கரைத்து ஊத்தியும் தந்தை பெரியார் திராவிட கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சமீபத்தில் கடலூரில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பெரியார் குறித்து அவதூறு கருத்துக்களை பேசியதால் பெரும் சர்சசை வெடித்துள்ளது, அரசியல் தலைவர்கள் பலரும் சீமானுக்கு கண்டனங்கள் தெரிவித்து வரும் நிலையில் கோவை வடக்கு மாவட்ட தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில்அன்னூர் பேருந்து நிலையம் அருகில் ஆர்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் சீமானை கண்டித்து அவரது உருவப்படத்திற்கு செருப்பு மாலை அணிவித்து மாட்டு சாதனத்தை கரைத்து வந்து அதனை சீமான் படத்தின் மீது ஊற்றி கண்டன கோஷங்களை எழுப்பினர். மேலும் அவரது உருவப்படத்தை கிழித்து காலில் போட்டு மிதித்து தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் சீமானின் உருவப்படத்திற்கு செருப்பு மாலை போட்டு சாணி கரைத்து ஊற்றி அவரது உருவப் படத்தை கிழித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“