Advertisment

கோவையில் அதே இடத்தில் மீண்டும் பெரியார் உணவகம்: தி.மு.க கூட்டணியினர் புடை சூழ திறப்பு விழா

திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் புடைசூழ அதே இடத்தில் தந்தை பெரியார் உணவகம் இன்று மீண்டும் திறக்கப்பட்டது.

author-image
WebDesk
New Update
கோவையில் அதே இடத்தில் மீண்டும் பெரியார் உணவகம்: தி.மு.க கூட்டணியினர் புடை சூழ திறப்பு விழா

பி.ரஹ்மான் கோவை

Advertisment

கோவை காரமடை கண்ணார்பாளையத்தில் அடித்து நொறுக்கப்பட்ட தந்தை பெரியார் உணவகம் அதே இடத்தில் அதே பெயரில் இன்று திமுக கூட்டணி கட்சியினர் படைசூழ மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் காரமடையை அடுத்துள்ள கண்ணார்பாளையம் நால் ரோட்டில் பிரபாகரன் என்பவர் தந்தை பெரியார் உணவகம் என்ற பெயரில் உணவகத்தை நடத்தி வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்த உணவகத்தின் உள்ளே புகுந்த மர்ம கும்பல் அவரை தகாத வார்த்தைகளால் பேசியதோடு கொலைவெறி தாக்குதலிலும் ஈடுபட்டனர்.

publive-image

இது குறித்து வழக்குப்பதிவு செய்த காரமடை போலீசார் இந்து முன்னணியை சேர்ந்த ரவிபாரதி, சுனில்குமார் உள்ளிட்ட 5 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், தப்பிச்சென்ற இருவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதனிடையே இன்று தந்தை பெரியாரின் 144 வது தினத்தை முன்னிட்டு அவரது பெயரிலேயே திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் புடைசூழ அதே இடத்தில் தந்தை பெரியார் உணவகம் இன்று மீண்டும் திறக்கப்பட்டது. திராவிடர் இயக்க தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன் ரிப்பன் வெட்டி உணவகத்தை துவக்கி வைத்தார்.

இந்த நிகழ்வின்போது தந்தை பெரியார் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கோவை கு.ராமகிருஷ்னண்,திமுக மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர் உட்பட பலர் உடனிருந்தனர்.

publive-image

தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய சுப.வீரபாண்டியன் கூறுகையில், 

நமக்கு வாய்த்திருக்கும் எதிரிகள் அடாவடித்தனமானவர்கள், அநாகரீகமானவர்கள். ஒரு கிளையில் இருந்து வந்த இரு கிளைகளுக்கிடையே (திமுக,அதிமுக) மோதல் இருக்கலாம். ஆனால் திராவிட இயக்கம் எனும் மரத்தையே வெட்டிவிட எண்ணி கோடரியோடு அலைகிறவர்கள் சிறுபான்மையினர்  மக்களை அழித்து விட வேண்டும். அவர்கள் நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என நினைக்கிறவர்கள் சமூக ஏற்றத்தாழ்வுகளை உருவாக்க நினைப்பவர்கள் நமக்கு கோடரியை வாங்கி திருப்பி வெட்டி பழக்கமில்லை.ஆனால் வெட்டி தூக்கிய எறிய வேண்டிய கடமை நமக்கு உள்ளது என கூறியுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment