கோவை, சித்தம்பாளையம் பல்லடம் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் பாலமுருகன். இவரது மனைவி மஞ்சுளா. இவர்கள் இருவரும் இன்று காலை இவர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தங்களது உறவினரை பார்க்க சென்றுள்ளனர். இதற்காக அரசு பேருந்து 69″டி காந்திபுரம் பகுதியில் இருந்து பட்டணம் செல்லும் பேருந்தில் பயணம் செய்துள்ளார்.
இந்த நிலையில் வரதராஜபுரம் பேருந்து நிறுத்தத்தில் அந்த தம்பதியினர் அரசு பேருந்தில் இறங்கி உள்ளனர். அப்போது பேருந்தில் இருந்து பேக்குடன் இறங்கிய பாலமுருகன் பேருந்து மூவ் ஆகும்போது திடீரென பேக்கை வைத்துவிட்டு பேருந்து பின் சக்கரத்தில் விழுந்தார். இதை தெரியாத டிரைவர் பேருந்தை இயக்கிய நிலையில், பாலகமுருகன் மீது பேருந்து சக்கரம் ஏறி பலியானார்.
இந்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது. இந்த சம்பவத்தில் அவருக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளதா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என பல்வேறு கோணங்களில் பீளமேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
பி.ரஹ்மான் கோவை மாவட்டம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/