Advertisment

திருடுற இடமும் நேரமும் முக்கியம்... கோவையில் இன்னோவா காருடன் சிக்கிய பலே ஆசாமி!

கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து ஒரு இன்னோவா கார், இரண்டு இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கோவை மாநகர காவல் துறை உதவி ஆணையர் சந்தீஸ் தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
Apr 28, 2023 21:03 IST
New Update
Police

கோவை போலீஸ்

கோவையில் நூதனமாக திருடும் சிவச்சந்திரனை காவல்துறையினர் பல்வேறு போராட்டங்களுக்கு இடையில் கைது செய்துள்ளனர்.

Advertisment

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்தவர் சிவச்சந்திரன் (54). இவரை பல்வேறு வழக்குகளனில் கைது செய்ய கடந்த மூன்று மாதமாக காவல்துறையினர் பல கட்டங்களாக விசாரணைகள் மேற்கொண்டு வந்தனர். நள்ளிரவு 2 மணியிலிருந்து காலை 5 மணி வரை மட்டுமே வீட்டை உடைத்து திருடக்கூடியவன் சிவச்சந்திரன்.

ஒரு வீட்டை திருட முயற்சிக்கு இரண்டு, மூன்று நாட்களுக்கு முன்பே வீட்டை முழுவதுமாக கண்காணித்து எவ்விதமான ஆள் நடமாட்டம் இல்லை என்பதை தெரிந்து கொண்டு அதன்பின் திருடுவதற்கான முய்றசியில் இறங்கும் இவரை தற்போது காவல்துறையினர் பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு கைது செய்துள்ளனர்.  இவரிடமிருந்து 57 சவரன் நகை, 31 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் ரொக்க பணம், பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மேலும் ஒரு இன்னோவா கார், இரண்டு இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கோவை மாநகர காவல் துறை உதவி ஆணையர் சந்தீஸ் தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்டுள்ள சிவச்சந்திரன் குறித்து கூறிய காவல்துறையினர், சிவச்சந்திரன் பீளமேடு சிங்காநல்லூர் பகுதியில் மட்டுமே திருட முற்படுவதாகவும், திருடுவதற்கு பயன்படுத்தக்கூடிய இருசக்கர வாகனத்திற்கு கோவை புறநகர் பகுதியில் உள்ள அன்னூர் அருகே பெட்ரோல் பங்கில் பெட்ரோல் அடிப்பதாகவும் கூறியுள்ளார்.

மேலும் சிவச்சந்திரனை பிடிப்பதற்கு இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு 200 சிசிடிவி கேமராக்கள் சோதனை செய்யப்பட்டு 300-க்கும் மேற்பட்ட பொது நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு தற்போது அவனை கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

கோவை மாநகர பகுதியில் தற்போது கோடை விடுமுறை காரணமாக சுற்றுலா செல்லக்கூடிய நபர்கள் வீடு பூட்டி இருந்தால் அது குறித்து அருகில் உள்ள காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று தினமும் இரவு காவல்துறையிலிருந்து வாகனம் ஒவ்வொரு பகுதியிலும் ரோந்து பணியில் ஈடுபடுவார்கள் என்று தெரிவித்தார்.

 பி.ரஹ்மான். கோவை மாவட்டம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Tamilnadu #Coimbatore
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment