கோவையில் நாளை நடைபெற உள்ள பிரதமர் மோடியின் ரோஷோ நிகழ்ச்சிக்காக கோவை மாவட்ட நிர்வாகம் மற்றும் கோவை மாநகர காவல் துறை பல்வேறு பாதுகாப்பு முன்னேற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றது. அதன் ஒரு பகுதியாக பிரதமரின் தனிப்பட்ட சிறப்பு பாதுகாப்பு படை பிரிவினரான எஸ்பிஜி குழுவினர் ரோட்டோ நிகழ்ச்சி நடைபெற உள்ள சாய்பாபா காலனி பகுதி முதல் ஆர்.எஸ்.புரம் வரை உள்ள பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் மாநகர காவல் துறையிடம் இணைந்து திடீரென ஆய்வு மேற்கொண்டனர்,
ஏற்கனவே பிரதமர் மோடி ரூட் சொல் நிகழ்ச்சிக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் பெயரில் திட்டமிட்டபடி ரோட்சோ நிகழ்ச்சி நடத்த அனுமதி கிடைத்துள்ளது. அதனை தொடர்ந்து தான் தற்போது பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது அந்தப் பகுதி முழுவதும் ரெட் சோனாக அறிவிக்கப்பட்டு கோவை மாநகர காவல் துறை மற்றும் மத்திய உணவுப் பிரிவு பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு படை அதிகாரிகள் அடங்கிய குழுவினரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
24 மணி நேரமும் அந்த பகுதியில் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் காவல்துறையும் மத்திய உளவு பிரிவும் ஈடுபட்டு வருகின்றது அதன் ஒரு பகுதியாக தான் தற்போது அந்த பகுதியில் பிரதமரின் தனிப்பட்ட சிறப்பு பாதுகாப்பு படை அதிகாரிகள் கள ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர் இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பி.ரஹ்மான். கோவை மாவட்டம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“