கோவை கள்ளபாளையம் பகுதியில் தனியார் நிறுவனத்திற்குள் மனித வலது கை கண்டெடுக்கபட்டது குறித்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை மாவட்டம், சூலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், சுதாகர் என்பவரது தனியார் நிறுவனத்தில் துண்டான நிலையில் மனித கை கண்டு எடுக்கப்பட்டுள்ளது. நிறுவனத்தின் ஸ்டோர் ரூம் அருகே துண்டாக வலது கை ஒன்று கிடப்பதாக அங்கு மேலாளராக பணிபுரியும் வைரவநாதன் என்பவர் உரிமையாளரிடம் கூறியுள்ளார்
இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த நிறுவனத்தின் உரிமையாளர் சுதாகர் சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் சூலூர் காவல்துறையினர் மனித கை எப்படி வந்தது என்பது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.