Advertisment

17 வயது சிறுவன் இயக்கிய வாகனம் விபத்து: பெற்றோர் மீது வழக்கு பதிவு; கோவை போலீஸ் தகவல்!

பொதுமக்கள் சாலை விதிகளை மதித்து இருசக்கர வாகனத்தில் செல்லும்போது ஹெல்மெட் அணியவும், நான்கு சக்கர வாகனத்தை செல்லும் போது கட்டாயமாக சீட் பெல்ட் அணிந்து செல்ல வேண்டும்.

author-image
WebDesk
New Update
Police Coimba.jpg

கோவை போலீஸ்

கோவை மாநகர காவல் ஆணையாளர் சார்பில் ஆணையர் அலுவலகத்தில் ("Nancy Untold Story") என்ற குறும்படத்தை கோவை மாநகர் காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் வெளியிட்டார். உண்மை சம்பவத்தை குறிப்பிட்டு எடுக்கப்பட்ட இந்த குறும்படம், பொதுமக்களிடையே போக்குவரத்து விழிப்புணர் ஏற்படுத்தவும் அதனை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும் என்று இந்த குறும்படம் வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

Advertisment

இந்த குறும்படம் வெளியிட்டு விழாவில் வடக்கு ஆணையர் ஸ்டாலின்,தெற்கு ஆணையர் சரவணன் மற்றும் கோவை மாநகர் பகுதியில் உள்ள காவல் நிலையங்கள் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் பங்கேற்றனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் கூறுகையில்,

பொது மக்களிடையே போதை பொருள் விழிப்புணர்வு குறித்து விழிப்புணர்வு செய்து வருகிறோம். பல்வேறு பிரச்சினைகளை பொதுமக்களுக்கு விழிப்புணர்வு செய்து வரும் நிலையில் தற்போது போக்குவரத்து பிரச்சனைகள் அதிக அளவில் ஏற்படுவதற்காக இந்த குறும்படம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த நான்சி குறும்படம் உண்மை சம்பவத்தை குறித்தும் பொது மக்களுக்கு அழுத்தமான செய்தியை வெளிப்படுத்தும் விதமாக தயாரிக்கப்பட்டு காவல்துறை வலைதளத்தில் பொதுமக்கள் பார்வைக்காக வெளியிடப்படும்.

பொதுமக்கள் சாலை விதிகளை மதித்து இருசக்கர வாகனத்தில் செல்லும்போது ஹெல்மெட் அணியவும், நான்கு சக்கர வாகனத்தை செல்லும் போது கட்டாயமாக சீட் பெல்ட் அணிந்து செல்ல வேண்டும். பீளமேடு பகுதியில் 17 வயது சிறுவன் நான்கு சக்கர வாகனத்தை இயக்கியதில் ஒருவர் சம்பவ இடத்தில் பலியாகி உள்ளார். மேலும் அந்த கார் தீப்பிடித்து எரிந்து முழுவதும் சேதம் அடைந்து விட்டது. சிறுவனின் பெற்றோர் மீது வழக்கு பதிவு செய்து புலன் விசாரணை நடத்தி வருகிறோம்.

18 வயது பூர்த்தியாகாத சிறுவர்கள் வாகனங்களை இயக்கினால் பெற்றோர் மீது வழக்கு பதிவு செய்து கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும். 18 பூர்த்தியானாலும் போக்குவரத்து விதிகளுக்கு உட்பட்டு வாகனங்களை இயக்க வேண்டும். அவிநாசி சாலையில் ஸ்பீடு கேமரா (Speed Camera) பொருத்தப்பட்டுள்ளது. 100 கிலோ மீட்டர் வேகத்தில் சென்றால் அவர்கள் வாகனத்திற்கு அபராதம் விதித்தும் பறிமுதல் செய்து வருகிறோம். இரவு நேரங்களில் அதிக அளவில் குடிபோதையில் வாகனம் ஓட்டி வருபவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

ராடுமேன் குற்ற வழக்கில் ஈடுபட்டவர்கள் மீது தமிழகம் முழுவதும் 73 வழக்குகள் உள்ளது. அதில் 3 பேர் கோவை நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர். அவர்களை விசாரணை செய்து வருகிறோம். மேலும் அவர்கள் 1500 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு வந்தது தெரியவந்துள்ளது. அதனை ஆராய்ந்து அவர்கள் அந்த பணத்தை என்ன செய்தார்கள் என்று குறித்து புலன் விசாரணை மேற்கொண்டு வருகிறோம். காவல்துறையில் சேரும்போது காவலர்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி அளிக்கப்பட்டது.

மேலும் அவர்களுக்கு தற்போது புதிதாக பயிற்சி அளித்துள்ளனர். அவர்கள் எந்த சூழ்நிலையில் துப்பாக்கியை பயன்படுத்த வேண்டும் என்று பயிற்சி அளித்து வருகிறோம். கொலை,கொள்ளை சம்பவம் குறித்த ரவுடிகளை கண்காணித்து வருகிறோம். ரவுடிகள் குறித்து காவலன் செயலியில் பட்டியல் வெளியீட்டு அதனை ரோந்து பணியில் மேற்கொள்ளும் போலீசார் கண்காணித்து வருகிறோம். சரித்திர குற்றவழக்கு உள்ள ரவுடிகளை தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் நீதிமன்றத்தில் ரவுடிகளுக்கு தண்டனை பெற்றுத் தருவதில் காவல்துறை தீவிரமாக செயல்பட்டு வந்ததாக கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Coimbatore
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment