Advertisment

பொதுமக்கள் தவற விட்ட செல்போன்கள்: மீட்டு ஒப்படைத்த கோவை காவல்துறை!

பெரும்பாலான குற்றங்கள் நிதி சார்ந்தவை என்பதால் மக்கள் தேவையில்லாத லிங்குகளை கிளிக் செய்ய வேண்டாம்.

author-image
WebDesk
New Update
Coimb Polos

கோவை மாவட்டத்தில் பொதுமக்கள் தவறவிட்ட 94 லஞ்சம் மதிப்புள்ள 504 செல்போன்களை உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்வு கோவை மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்றது. கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் செல்போன்களை உரிமையாளர்களிடம் ஒப்படைத்தார். மேலும் மீட்பு பணியில் ஈடுபட்ட குழுவினருக்கு சான்றிதழ்களையும் வழங்கினார்.

Advertisment

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பத்ரி நாராயணன்,2022 ஆம் ஆண்டிலிருந்து தொலைந்து போன செல்போன்களை மீட்பதற்காக தனிப்படை அமைத்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறோம். இதுவரை சுமார் 2300 தொலைந்து போன செல்போன்கள் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளோம். கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் 3 கோடியை 70 லட்சம் மதிப்பிலான  தொலைந்து போன செல்போன்கள் மீட்கப்பட்டுள்ளது.

இந்த வருடம் இதுவரை பதிவாகியுள்ள 1100 சிஎஸ்ஆர்-களில் 504 செல்போன்கள் மீட்கப்பட்டுள்ளது. மீதம் உள்ளவைகளையும் மீட்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறோம். சைபர் குற்றங்களைப் பொறுத்தவரை இந்த ஆண்டு மட்டும் இதுவரை 84 எஃப்ஐஆர்-கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 1 கோடியே 20 லட்சம் ரூபாய் மீட்கப்பட்டு மக்கள் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான குற்றங்கள் நிதி சார்ந்தவை என்பதால் மக்கள் தேவையில்லாத லிங்குகளை கிளிக் செய்ய வேண்டாம்.

கஞ்சா வழக்குகளை பொருத்தவரை இந்த ஆண்டு மட்டும் 242 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கஞ்சா வழக்கில் 13 நபர்கள் மீது குண்டாஸ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களில் இருந்து கஞ்சா கொண்டு வரும் நபர்களை கண்காணித்து இதுவரை 10 குழுவினரை முடக்கியுள்ளோம். கைது செய்யப்பட்டவர்கள் தற்போது சிறையில் இருக்கும்போதே அவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து தண்டனை பெற்றுத்தரும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறோம்.

போக்சோ வழக்குகளை பொருத்தவரை கடந்த ஜூன் 30 வரை 139 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 135 வழக்குகளில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பத்து வழக்குகளில் தண்டனை பெற்று தந்துள்ளோம். ப்ராஜக்ட்  பள்ளிக்கூடம் மூலம் அனைத்து பள்ளிகளிலும் போக்சோ குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. 2022-2023 கல்வியாண்டில் மட்டும் ' ப்ராஜக்ட்  பள்ளிக்கூடம்' மூலம் 500க்கும் மேற்பட்ட சிறு குற்றங்கள் கண்டறியப்பட்டு தடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Coimbatore
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment