ஜக்கி வாசுதேவ் நிறுவிய ஈஷா அறக்கட்டளை தொடர்பாக கடந்த 15 ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் விவரங்களை கோவை காவல்துறை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. 23 பக்கங்கள் கொண்ட இந்த அறிக்கையில்,“படிப்புக்காக அங்கு வந்தவர்கள் மற்றும் காணாமல் போனவர்கள், ஆகியோர்கள்” பற்றிய புகார்கள் விபரங்கள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கே.கார்த்திகேயன் தாக்கல் செய்த அறிக்கையில், ஈஷா அறக்கட்டளை தொடர்பாக ஆலாந்துறை காவல் நிலையத்தில் 15 ஆண்டுகளில் மொத்தம் 6 காணாமல் போனதாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த 6 வழக்குகளில், 5 வழக்குகளின் நடவடிக்கை கைவிடப்பட்டது" என முடிக்கப்பட்டன. "காணாமல் போனவர் இன்னும் கண்டுபிடிக்கப்படாததால்" ஒரு வழக்கு இன்னும் விசாரணையில் உள்ளது.
மேலும், குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 174 (தற்கொலை குறித்து போலீஸ் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்வது போன்றவை) கீழ் ஏழு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. "அதில் இரண்டு வழக்குகள் தடயவியல் ஆய்வக அறிக்கை இல்லாததால் விசாரணையில் உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் தற்போது அறக்கட்டளையால் கட்டப்பட்டு வரும் மயானத்தை அகற்றக் கோரி பக்கத்து வீட்டுக்காரர் சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகியுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்த மயானம் தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளதால் தற்போது மயானம் செயல்படவில்லை. அதேபோல் 'ஈஷா அவுட்ரீச்' நிறுவனத்தில் பணிபுரியும் மருத்துவர் மீது உள்ளூர் பள்ளி முதல்வர் கொடுத்த புகாரின் அடிப்படையில், பதிவு செய்யப்பட்ட போக்ஸோ வழக்கின் விவரங்களை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர். இது குறித்து மருத்துவர் கைது செய்யப்பட்டு ஜாமீன் மறுக்கப்பட்ட நிலையில், வழக்கு விசாரணையில் உள்ளது.
டெல்லியில் உள்ள சாகேத் காவல் நிலையத்தில் ஒரு பெண், 2021 ஆம் ஆண்டு ஈஷா யோகா மையத்தில் யோகா பயிற்சியில் கலந்துகொண்டபோது தனக்கு பாலியல் பலாத்காரம் நடந்தாக அளித்த பாலியல் வன்கொடுமை புகார் குறித்தும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜீரோ எப்ஐஆர் கோவை காவல்துறைக்கு மாற்றப்பட்டது. அந்த பெண் பின்னர் புகாரை வாபஸ் பெற்றாலும், அந்த பெண்ணின் பிரிவு 164 சி.ஆர்.பிசி (CrPC) அறிக்கை பதிவு செய்யப்படவில்லை மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்படவில்லை அவரிடம் விசாரிக்கப்படவில்லை என்பதால் மேலும் விசாரணைக்கு அனுமதி கோருவதாக போலீசார் தெரிவித்தனர்.
அதேபோல், பழங்குடியின மக்களுக்கு வழங்கப்பட்ட நிலத்தை ஆக்கிரமித்ததற்காக ஈஷா யோகா மையத்தின் மீதான எஃப்ஐஆர் விசாரணையில் உள்ளது என்று அறிக்கை கூறுகிறது. அக்டோபர் 1, 2024 நிலவரப்படி, அறக்கட்டளைக்கு கிடைத்த தகவலின்படி, 217 பிரம்மச்சாரிகள், 2455 தன்னார்வலர்கள், 891 ஊதிய ஊழியர்கள், 1475 ஊதியம் பெற்ற தொழிலாளர்கள், 342 ஈஷா ஹோம் பள்ளி மாணவர்கள், 175 ஈஷா சம்ஸ்கிருதி மாணவர்கள், 704 விருந்தினர்கள் / தன்னார்வலர்கள் மற்றும் கோயம்புத்தூரில் உள்ள ஈஷா யோகா மையத்தில் 912 விருந்தினர்கள் குடிசைகளில் வசிக்கின்றனர்.
42 மற்றும் 39 வயதுடைய தனது மகள்கள் காவலில் வைக்கப்பட்டதாகக் கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவைத் தாக்கல் செய்த இரண்டு பெண்களைத் தவிர, அறக்கட்டளை வளாகத்தில் உள்ள 558 பேரிடம் உணவு, பாதுகாப்பு மற்றும் இதர காரணிகள் குறித்து போலீஸார் தற்செயலாக விசாரித்தனர். விசாரணைக் குழுவில் உள்ள குழந்தை நிபுணர்கள், குழந்தைகள் உதவி எண், குழந்தைகள் உரிமைகள் மற்றும் போக்ஸோ சட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தேவை என்று கூறியுள்ளனர்.
மனநல மருத்துவர்கள் "சிலருக்கு மனநிலை ஊசலாடுகிறது, அவற்றைக் கவனிக்க அவர்களுக்கு நேரம் தேவை" என்று கவனித்தனர். அவர்களின் அறிக்கை உறுதியானதாக இல்லை. கோயம்புத்தூர் சுகாதாரப் பணிகள் இணை இயக்குநர், மார்ச் 2027 வரை செல்லுபடியாகும் உரிமம் பெற்ற ஈஷா கிளினிக் பற்றிய விரிவான அறிக்கையை அளத்துள்ளார். இருப்பினும், காலாவதியாகும் காலத்தைத் தாண்டிய மருத்துவ உபகரணங்கள் மற்றும் தகுதியற்ற நபர் எக்ஸ்ரே. எடுத்துக்கொள்வது குறித்த கவலையை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.
விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பெண்கள் தாங்கள் தாமாக முன்வந்து அங்கு வசிப்பதாகக் கூறினாலும்,பிஒஎஸ்.எச். (POSH) சட்டத்தின் கீழ் கட்டாயப்படுத்தப்பட்ட உள் புகார்க் குழு "சரியாகச் செயல்படவில்லை" என்று குழு கூறியது. அதேபோல் சமையலறையில் இருந்து உணவு மாதிரிகளை எடுக்க முடியவில்லை. பிரம்மாச்சாரிகள் தாங்கள் விரும்பும் போது எங்கும் செல்ல சுதந்திரமாக இருப்பதாகவும், அவர்கள் விரும்பும் எந்த நேரத்திலும் தங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களை சந்திக்கிறார்கள்" என்று காவல்துறை அறிக்கை கூறியது. இந்த அறிக்கையை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம், இந்த வழக்கை, அக்டோபர் 18ஆம் தேதி விசாரிக்க உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.