/tamil-ie/media/media_files/uploads/2022/12/Coimbatore-2.jpg)
பி.ரஹ்மான் கோவை
பொள்ளாச்சியில் நடைபெற்ற நகர சபை கூட்டத்தில் திமுக நகர மன்ற உறுப்பினர் தனது பதவியை ராஜினாமா செய்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பொள்ளாச்சி நகராட்சியின் நகர மன்ற கூட்டம் நகராட்சி கூட்ட அரங்கில் தலைவர் மற்றும் ஆணையாளர் தலைமையில் நடைபெற்றது. 36 வார்டுகளை கொண்ட பொள்ளாச்சி நகராட்சியில் 32 வார்டுகளில் திமுக"வும் மூன்று வார்டுகளில் அதிமுகவும் ஒரு வார்டில் சுயேச்சை ஒரு வார்டில் வெற்றி பெற்றுள்ளனர்.
இந்நிலையில் ஏழாவது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நர்மதா கண்ணுச்சாமி நகராட்சி கூட்ட அரங்கில் தனது பதவியை ராஜினாமா செய்யப்போவதாக அறிவிக்க இருந்தார். ஆனால் கூட்டத்தில் 47 தீர்மானங்கள் குறித்து விவாதிக்கப்பட இருந்தது.
/tamil-ie/media/media_files/uploads/2022/12/image-778.png)
திடீரென அனைத்து தீர்மானங்களும் ஏக மனதாக நிறைவேற்றப்பட்டதாக கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. ஐந்து நிமிடம் கூட நடைபெறாத இந்த கூட்டத்தில் தனது ராஜினாமாவை எவ்வாறு அறிவிப்பது என்பது தெரியாமல் நகராட்சி ஆணையாளரிடம் தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.
இந்த ராஜினாமா நிகழ்வானது திமுக"வில் நடக்கும் உச்சக்கட்ட கோஷ்டி பூசல் என பரவலாக பேசப்பட்டு வருகிறது. ராஜினாமா செய்த நர்மதா கண்ணுச்சாமி தான் நகர மன்ற தலைவராக முன்மொழிவார் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில் திடீரென தற்போதைய நகர செயலாளர் நவநீத கிருஷ்ணனின் மனைவி சியாமளா அறிவிக்கப்பட்டார்.
/tamil-ie/media/media_files/uploads/2022/12/image-777.png)
இந்நிலையில் நர்மதா கண்ணச்சாமி தனது பதவியை ராஜினாமா செய்தார். ஓட்டு பதிவு செய்து தேர்ந்தெடுத்த பொதுமக்கள் தங்களது பகுதிக்கு பல நல்ல திட்டங்கள் வரும் என்று எதிர்பார்த்து இருந்த நிலையில் திமுக உறுப்பினர் ராஜினாமா பொதுமக்களை ஏமாற்றம் அடைய செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதைத்தொடர்ந்து பொள்ளாச்சி நகர மன்ற உறுப்பினர்கள் பங்கேற்ற நகராட்சியின் சாதாரண மன்ற கூட்டத்தில் நகர மன்ற தலைவரை கண்டித்து அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்து பட்டை நாமம் போடும் திமுக தலைவர் என்று கோஷம் எழுப்பினர். பதிலுக்கு திமுக"வினரும் கோஷம் எழுப்பியதால் நகர மன்ற கூட்ட அரங்கில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us