தேசிய சாலை பாதுகாப்பு வாரம் 2025*ஆக ஜனவரி 10 "ம்"தேதி நாடு முழுவதும் கொண்டாடபட்டு வருகின்றது. இதன் ஒரு பகுதியாக இன்று கோவை காந்திபுரம் அருகே உள்ள மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி அருகே ஸ்ரீ இராமகிருஷ்ணா மருத்துவமனை சார்பாக விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை கோவை மாவட்ட காவல்துறை கூடுதல் துணை கண்காணிப்பாளர் சிற்றரசு, எஸ்.என்.ஆர் அன் சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் சுந்தர் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.
இதனை தொடர்ந்து மாணவ மாணவியர்கள் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்தும் வகையிலும் - சாலை விபத்துக்களை தடுக்கும் வகையில் தலைகவசம் அணியவேண்டும் வாகனங்களில் அதிக வேகம் கூடாது வாகனங்கள் ஓட்டும் போது செல்போன் பயன்படுத்த கூடாது. மாநகர் பகுதிகளில் வேக வரம்புகளை கடை பிடிக்க வேண்டும் என்பது போன்ற பதாதைகளை கைகளில் ஏந்தியவாறு ஊர்வலமாக மாணவர்கள் சென்றனர். மகளிர் பாலிடெக்னிக் கல்லூரியில் துவங்கிய இந்த பேரணி கோவை வ.உ.சி பூங்கா பகுதியில் நிறைவு பெற்றது.
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய கூடுதல் காவல்துறை துணை கண்காணிப்பாளர் சிற்றரசு கூறுகையில், மாநகர் முழுவதும் நோ ஹெல்மெட் நோ என்ட்ரி என்ற திட்டத்தின் கீழ் இரு சக்கர வாகன ஓட்டுநர்களுக்கு தலைகவசம் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். இதனால் கடந்த ஆண்டுகளை விட 2024"ல் வாகன விபத்துக்கள் அதிக அளவில் குறைந்துள்ளது. மேலும் சாலை விதிகளை மதிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை பொதுமக்கள் அனைவரும் கடை பிடிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இந்த பேரணியில் ஸ்ரீ இராமகிருஷ்ணா மருத்துவமனையின் மருத்துவ இயக்குனர் ராஜகோபால், மருத்துவ கண்காணிப்பாளர் அழகப்பன், மருத்துவர்கள் மஞ்சுநாதன், பார்த்திபன், ஆகியோருடன், மருத்துவமனை செவிலியர்கள், ராமகிருஷ்ணா கல்லூரி நாட்டு நல பணி திட்ட மாணவர்கள் என சுமார் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பி.ரஹ்மான் கோவை மாவட்டம்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“