Advertisment

கையில் இரும்பு ராடு, தலையில் மங்கி கேப்: கோவையில் வீடு புகுந்து திருடும் கொள்ளையர்கள்!

குரங்கு குல்லா கொள்ளையர்கள் கையில் இரும்பு ராடுயுடன் ஒவ்வொரு வீடுகளாகச் சென்று ஆட்கள் இருக்கின்றனரா? என்று நோட்டமிட்டு திருடி செல்லும் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

author-image
WebDesk
New Update
Monkey Cap

கோவையில் குரங்கு குல்லா கொள்ளையர்கள் இருவர்  - தனியார் குடியிருப்பு வளாகத்தில் வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகை என கவரிங் நகைகளை திருடிச் சென்ற சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ள நிலையில், கொள்ளையர்கள் இரும்பு ராடுடன் வரவதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

Advertisment

கோவை, துடியலூர் அருகே உள்ள மேட்டுப்பாளையம் ரோடு ஸ்ரீ வைசா கார்டன் குடியிருப்பு வளாகத்திற்குள் நேற்று அதிகாலை 4.00 மணி அளவில் நுழைந்த குரங்கு குல்லா கொள்ளையர்கள் கையில் இரும்பு ராடுயுடன் ஒவ்வொரு வீடுகளாகச் சென்று ஆட்கள் இருக்கின்றனரா? என்று நோட்டமிட்டு திருடி செல்லும் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

அந்தக் குடியிருப்பில் வசித்து வரும் கிருஷ்ண ஐயர் என்பவரின் மகன் பி.கே.ஜெயராமன் (70) என்பவர் தனது மகள் சிகிச்சைக்காக வீட்டை பூட்டி விட்டு பாலக்காட்டிற்கு சென்று விட்டார். வீடு 10 நாட்களுக்கு மேல் பூட்டி இருப்பதும், அங்கு ஆட்கள் இல்லாததை அறிந்த குரங்கு குல்லா கொள்ளையர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தார். பிறகு அங்கு இருந்த பீரோவில் வைக்கப்பட்டு இருந்த 4 நெக்லஸ், 1 பிரேஸ்லெட் ஆகியவற்றை திருடி விட்டு நைசாக வீட்டை விட்டு வெளியேறி சென்றார்.

இந்த நகைகள் அனைத்தும் விழா காலங்களில் அலங்காரத்திற்காக போடப்படும் கவரிங் நகைகள் ஆகும். இதன் மதிப்பு 40 ஆயிரம் ஆகும். வீட்டில் புகுந்த கொள்ளைர்கள்  அனைத்தும் தங்க நகைகள் என நினைத்து திருடி சென்று உள்ளனர். இந்த காட்சிகள் அங்கு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. நேற்று காலை ஜெயராம் வீட்டிற்கு வந்த வேலைக்கார பெண் வீட்டிற்குள் கொள்ளையன் புகுந்து சென்றதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.

Advertisment
Advertisement

இதுகுறித்து பாலக்காட்டில் உள்ள ஜெயராமுக்கு தகவல் தெரிவித்தார். அவர் அங்கு இருந்த படியே செல்போன் மூலம் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்த்து அதிர்ச்சி அடைந்த நிலையில், இதுகுறித்து கோவை துடியலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பிறகு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் .மேலும் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சி மூலம் திருடனை தேடி வருகிறார்கள்.

மேலும் கடந்த 7 ம் தேதி அன்று அருகே உள்ள வெள்ளக்கிணறு பகுதியில் உள்ள மான்செஸ்டர் காட்டன் சிட்டி என்ற குடியிருப்பு வளாகத்தில் புகுந்து ரமேஷ் என்பவருக்கு சொந்தமான வீட்டில் கொள்ளை அடிக்க முயன்ற சம்பவம் நடந்தது உள்ளது. இந்த தொடர் திருட்டு சம்பவங்களால் அப்பகுதி பொதுமக்களும், குடியிருப்பு வாசிகளும் அச்சமடைந்து உள்ளனர். மேலும் துடியலூர் குற்றப்பிரிவு காவல் துறையில் குறைவான காவலர்களை இருப்பதால் தொடர் திருட்டு ஈடுபடும் குரங்கு குல்லா கொள்ளையர்களை பிடிக்க முடியாமல் காவல் துறையினர் திணறி வருகிறதாக அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Coimbatore Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment