கோவையில் செயல்பட்டு வரும் வீரவர்மன் வீர சிலம்பாட்ட பயிற்சி பள்ளி சார்பில் கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் சிறுவர், சிறுமியர்களுக்கு பாரம்பரிய தற்காப்பு கலைகளை பயிற்றுவிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக சிலம்பாட்டம், களரி போன்றவை கலைகளுக்கு பயிற்சி அளித்து வருகின்றனர். இப்பள்ளியில் பயிற்சி பெற்ற மாணவர்கள் 400க்கும் மேற்பட்டோர் தீபந்தத்துடன் கூடிய சிலம்பம் சுற்றி இரு உலக சாதனைகளை படைத்துள்ளனர்.
கோவை அவினாசி சாலை பிராட்வே பகுதியில் அமைந்துள்ள டெக்கத்லான் வளாகத்தில் நடைபெற்ற சாதனை நிகழ்வில் 200 சிறுவர் சிறுமியர் ஒற்றை சிலம்பத்தின் இரு முனைகளிலும் நெருப்பு பற்றவைத்து 10 நிமிடம் தீப்பந்த சிலம்பம் சுற்றி நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்து அசத்தினர். இதேபோல் நட்சத்திர வடிவிலான சிலம்பத்தின் 8 முனைகளிலும் நெருப்பு பற்றவைத்து நட்சத்திர சிலம்பம் 10 நிமிடங்கள் சுற்றிய 250க்கும் மேற்பட்டோர் பள்ளி மாணவ, மாணவிகள் நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டத்தில் இதற்கு முன்னதாக 100 பேர் தீப்பந்தத்துடன் கூடிய சிலம்பம் சுற்றி சாதனை படைத்தனது. தற்போது இந்த சாதனையை இவர்கள் முறியடித்துள்ளனர். இந்த சாதனைகள் குறித்து பேசிய வீரவர்மன் வீர சிலம்பாட்ட பயிற்சி பள்ளியின் பயிற்சி ஆசிரியர் ராதாகிருஷ்ணன், தீபந்தத்துடன் கூடிய இந்த சிலம்பம் சாதனை என்பது சாதாரணமான நிகழ்வு அல்ல. இதற்காக மாணவர்கள் கடந்த மூன்று மாதங்களாக கடுமையான பயிற்சியை மேற்கொண்டனர்.
மாணவர்கள் தங்கள் தேர்வுகளையும் பொருட்படுத்தாமல் நாங்கள் இந்த சாதனையை படைபோம் என்ற உறுதியுடன் இந்த சாதனையை படைத்துள்ளனர். தமிழகத்தில் இது போன்ற பாரம்பரிய தற்காப்பு கலைகளை பயிற்றுவிக்கும் திறமையான ஆசான்கள் பலர் இருக்கிறார்கள். அவர்களுக்கு உரிய அங்கீகாரத்தை அரசு வழங்க வழங்க வேண்டும். அரசு பள்ளிகளில் தற்காப்பு கலைகளுக்கு என திறமையான பயிற்சியாளர்களை நியமித்து மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க அரசு வேலை வாய்ப்பை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இதனை தொடர்ந்து தீப்பந்த சிலம்பம் சுற்றி நோபல் உலக சாதனை படைத்ததற்கான சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கபட்டது. பாரம்பரிய தற்காப்பு கலையான சிலம்பாட்டத்தில் தீபந்தத்துடன் சிலம்பம் சுற்றியது பார்வையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது குறிப்பிடத்தக்கது.
பி.ரஹ்மான் கோவை மாவட்டம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“